கொற்றமாருதி - வெற்றியை உடைய அனுமன்; உற்ற உரத்து அடங்கின வாளிகள் - வந்து பட்டவையாய் மார்பில் பதிந்தவைகளான (இந்திரசித்தின்) அம்புகள் அனைத்தும்; உக உதறா - கீழே சிந்தும்படி உதறித் தள்ளிவிட்டு; அவன் தேர் மிசை குதித்து - இந்திரசித்துவின் தேரின்மேல் எழும்பிப் பாய்ந்து; உலகு எலாம் பல கால் முற்றி வென்ற போர்மூரி வெம் சிலையினை - உலகும் யாவையும் பல முறை முழுவதும் வென்றதான போரில் சிறந்த அவனது வலிய வில்லினை; வன் கையால் பற்றி - தனது வலிய கையினால் பிடித்து; பறித்து எழுந்து முறித்தான் -பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து ஒடித்தெறித்துவிட்டான்.