இலங்கையர்மகிழ்ச்சி  

5804.

வந்துஇரைத்தனர், மைந்தரும், மகளிரும்,
                           மழைபோல்,
அந்தரத்தினும்,விசும்பினும், திசைதொறும் ஆர்ப்பார்;
முந்தி உற்றபேர் உவகைக்கு ஒர் கரை இலை;
                           மொழியின்,
இந்திரன்பிணிப்புண்ட நாள் ஒத்தது, அவ் இலங்கை.

     மைந்தரும்மகளிரும் -(அரக்கர்களில்) ஆடவர்களும்
பெண்பாலாரும்;வந்து இரைத்தனர் - வந்து ஒலி செய்தவராய்; மழை
போல் -
மேகத்தின்பேரிடி போல; அந்தரத்தினும், விசும்பினும், திசை
தொறும் ஆர்ப்பார் -
வெற்றிடங்களிலும், ஆகாயத்திலும், நான்கு
திசைகளிலும், பெருமுழக்கமிடுவாராயினார்; முந்தி உற்ற பேர் உவகைக்கு -
யாவற்றினும்முன்னதாக அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு; ஓர் கரை இலை -
ஒருஎல்லை இல்லை; மொழியின் - (அம் மகிழ்ச்சிக்கு ஒரு உவமை)
கூறுமிடத்து;அ இலங்கை இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது - அந்த
இலங்கை நகர்,(முன்பு) தேவேந்திரன் மேகநாதனால் கட்டப்பட்ட நாளில்
களிப்படைந்ததைஒத்திருந்தது.

     மேகநாதன்,தேவேந்திரனைப் பிடித்துக் கட்டிக் கொண்டு வந்த போது,
இலங்கை நகரத்தினர் எப்படி மகிழ்ந்தனரோ, அப்படி அனுமனைக் கட்டிக்
கொண்டு வந்த இப்போதும் மகிழ்ந்தனர் என்பதாம்.               (88)