5813.

ஆர்ப்பு உறஅஞ்சினர்; அடங்கினார் பலர்;
போர்ப்புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்;
பார்ப்புற,பார்ப்புற, பயத்தினால் பதைத்து,
ஊர்ப் புறத்துஇரியலுற்று ஓடுவார், பலர்.

     பலர், ஆர்ப்புஉற அஞ்சினர் அடங்கினார் - பல அரக்கர்கள்,
நகரில் ஆரவாரம் உண்டாக, (அதனைக் கேட்டு) பயந்தவர்களாய்
அடங்கியிருந்தனர்; பலர் போர் புறச் செயலினை புகல்கின்றார் - வேறு
பலஅரக்கர்கள், (அனுமான்) போரில் செய்த வீரச் செயல்களை எடுத்துக்
கூறுவாராயினார்; பலர் பார்ப்புற பார்ப்புற  - மற்றும் பல அரக்கர்கள்,
அனுமனைப் பார்க்கும் போதெல்லாம்; பயத்தினால் பதைத்து ஊர்ப் புறத்து
இரியலுற்று ஓடுவார் -
அச்சத்தால் நடுங்கி, ஊருக்கு வெளியே சிதறி
ஓடுபவரானார்கள்.

     அனுமனைக் கண்டஅரக்கர் பலரின் செயல்கள் கூறப்பட்டன.    (9)