5817. | 'திண்திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான், தண்டல் இல் தன்உருக் கரந்த தன்மையான், மண்டு அமர்தொடங்கினன், வானரத்து உருக் கொண்டனன்,அந்தக்கொல்?' என்றார் பலர். |
அந்தகன் - (முன்புஇராவணனுக்குத் தோற்று ஓடிய) எமன்; திண் திறல்அரக்கர் தம் செருக்கு சிந்துவான் - மிக்க வலிமை உடைய அரக்கர்களதுகருவத்தை அழிக்கும் பொருட்டு; தண்டல் இல் தன் உரு கரந்ததன்மையான் - அழிதல் இல்லாத தனது வடிவத்தை மறைத்துக் கொண்டவனாய்; வானரத்து உரு கொண்டனன் - குரங்கு வடிவத்தை எடுத்துக் கொண்டு; மண்டு அமர் தொடங்கினன் கொல் - மிக்க போரைத் தொடங்கிச் செய்தனனோ ?; என்றார் பலர் - என்று கூறினார் பல அரக்கர்கள். அனுமன் யாவன்என்பதைப் பற்றி அரக்கர் தமக்குள் ஆராய்ந்தமையைத் தெரிவித்தவாறு. (13) |