கட்டு்ப்பட்டுச்செல்லும் அனுமன் கருத்து 5823. | ஆண்தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்; மீண்டிலன்;வேறலும் விரும்பலுற்றிலன்; 'ஈண்டு இதுவேதொடர்ந்து இலங்கை வேந்தனைக் காண்டலே நலன்'எனக் கருத்தின் எண்ணினான். |
ஆண் தொழில்அனுமனும் - ஆண்மைத் தொழிலின்மிக்க அனுமனும்; மீண்டிலன் - திரும்பிச் செல்லாதனாயும்; வேறலும் விரும்பல் உற்றிலன் - அவர்களை வெல்லுதலையும் விரும்பாதவரையும்; ஈண்டு இதுவே தொடர்ந்து - இங்கு இப்படியே தொடர்ந்து சென்று; இலங்கை வேந்தனைக் காண்டலே நலன் - இலங்கை அரசனான இராவணனைப் பார்ப்பதே நல்லதாகும்; என கருத்தில் எண்ணினன் - என்று மனத்தில் நினைத்தவனுமாகி; அவரொடு ஏகினான் - அவ்வரக்கர்களுடனே தானும் கூடச் சென்றான். 'தொடர்ந்துபோய்' என்னும் பாடம் ஓசைச் சிதைவு நோக்கி விடப்பட்டது. (19) |