அனுமனுக்கு உற்றதைத்திரிசடை சொல்ல, சீதை புலம்புதல்

5834.

'இறுத்தனன்கடி பொழில், எண்ணிலோர் பட
ஒறுத்தனன்' என்றுகொண்டு உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள்சோர்வுற, வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல்சிந்தையாள் கவன்று கூறினாள்.

     கடிபொழில்இறுத்தனன் - மணம் மிக்கஅசோகவனத்தை
ஒடித்தழித்தான்; எண் இலோர் பட ஒறுத்தனன் - அளவிறந்த அரக்கர்கள்
அழியுமாறு கொன்றிட்டான்;
என்று கொண்டு -என்றுஅவ்வப்போது
சொல்லக் கேட்டுணர்ந்து;உவக்கின்றாள் - மகிழ்கின்றவளான
சீதாபிராட்டிக்கு; கறுத்தல் இல்சிந்தையாள் - களங்கமில்லாத மனத்தை
உடையவளான திரிசடை என்பவள்;வீரற்கு உற்றதை - மகாவீரனான
அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையை;உயிர் வெறுத்தனள் சோர்வுற -
தன் உயிரை வைத்துக் கொண்டு வாழ்வதில்வெறுப்புற்றவளாய், தளர்ச்சி
அடையும்படி; கவன்று கூறினாள் -மனக்கவலையுடன் சொன்னாள்.

     அனுமன் செய்தஆற்றல் மிக்க செயல்களையும், அவனுக்கு நேர்ந்த
துன்ப நிலைமையையும் திரிசடை. சீதைக்கு அவ்வப் போது கூறுகின்றாள்
என்று உணரலாம்.                                        (30)