5848. | வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய திண்மைக்கும்,தனி உறையுளாம் முழு முகம், திசையில் கண்வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம் காக்கும் எண்மர்க்கும்மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற. |
வண்மைக்கும் -(குபேரசம்பத்தை வென்று பெற்றுள்ள) வளப்பத்துக்கும்; திருமறைகட்கும் - சிறந்த வேதங்கட்கும்; வானினும் பெரியதிண்மைக்கும் - ஆகாயத்தினும் பெரிய வலிமைக்கும்; தனி உறையுளான் -ஒப்பற்ற இருப்பிடமாய் உள்ள இராவணன்; முழுமுகம் திசையில்கண்வைக்கும் தொறும் - தனது பெரிய முகங்கள்பத்தையும் ஒரு மிக்க வைத்து, எல்லாத்திக்குகளிலும் நோக்கும் போதெல்லாம்; களிற்றொடு மாதிரம் காக்கும் எண்மர்க்கும் - யானைகளோடு அந்த அந்தத் திக்குகளைக் காக்கும் எண் திசைக்காவலர்கட்கும்; மற்றை இருவர்க்கும் - மற்றவையான மேலும் கீழும் இருந்து பாதுகாக்கின்ற (துருவன் ஆதிசேடன் என்னும்) இருவர்க்கும்; பெரும் பயம் எய்த - மிக்க அச்சம் தோன்றவும். இராவணன்பார்வைக்கு, எட்டுத்திக்குப் பாலகர்களும் ? வானைப் பாதுகாக்கும் துருவனும், நிலத்தைப் பாதுகாக்கும் ஆதிசேடனும் பயந்து கிடந்தனர் என்பது கருத்து. (44) |