5877. | 'யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்? ஆர் உனைவிடுத்தவர் அறிய, ஆணையால் சோர்விலைசொல்லுதி' என்னச் சொல்லினான்- வேரொடும்அமரர்தம் புகழ் விழுங்கினான். |
அமரர் தம் புகழ்வேரொடும் விழுங்கினான் - தேவர் புகழை அடியோடு உண்டவனான இராவணன்; நீ யாரை - நீ யார்?; இங்கு எய்து காரணம் - இங்கு வந்த காரியம்; என்னை - யாது?; உனைவிடுத்தவர் ஆர் ? - உன்னை அனுப்பியவர் யாவர் ?; அறிய - நான் தெரிந்து கொள்ளுமாறு; ஆணையால் - என் கட்டளையின் படி; சோர்வு இலை சொல்லுதி என்ன சொல்லினான் - தவறில்லாமல் உள்ளபடி சொல்லுவாய் என்று (அனுமனை நோக்கிக்) கூறினான். விழுங்கினான் என்பது அழித்தான் என்ற பொருளில் வந்த மரபு வழுவமைதி. சோர்விலை; 'பாசம் பிணிப்பால் உண்டான தளர்ச்சியின்றி' என்றும் பொருள் கூறலாம். (73) |