5879.

'அனையவன் யார் ? என, அறிதியாதியேல்,
முனைவரும்,அமரரும், மூவர் தேவரும்,
எனையவர்எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இருவினை முடிக்க, நின்றுளோன்;

     அனையவன் யார்என - அந்த வில் வீரன் யாவன் என்று; அறிதி
ஆதியேல் -
(விவரம்) அறிய வேண்டுவாயானால்; முனைவரும் -
முனிவர்களும்; அமரரும் - தேவர்களும்; மூவர் தேவரும் -
கடவுளர்களாகிய மும்மூர்த்திகளும்; எனையவர் எனையவர் யாவர் -
இனவகை யாலும் மேம்பாட்டாலும் எத்தனை பேர்கள் உண்டோ அவர்களும்;
யாவையும் -
அவர்கள் ஒழிந்த அஃறிணைப் பொருள்களாயுள்ளவைகளும்;
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் -
நினைத்தற்கும்
அரியதான பெரியகாரியத்தை நிறைவேற்றுவதற்கு, அவதரித்து நிலை
பெற்றுள்ளவன்.

     இரு வினை என்றதுஇராவண வதத்தை.                    (75)