5891.

'ஆயவன் தன்னொடு, ஆண்டு, திங்கள் ஓர்
                           நான்கும் வைகி,
மேய வெஞ் சேனைசூழ வீற்று இனிது இருந்த
                           வீரன்,
"போயினிர் நாடும்" என்ன, போந்தனம், புகுந்தது
                           ஈது' என்று,
ஏயவன் தூதன்சொன்னான். இராவணன்
                          இதனைச் சொல்வான்:

     ஆயவன் தன்னொடுஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி -
அந்தச்சுக்கிரீவனுடனே அந்த ருசிய முகமலையில் மழைக்காலமாகிய நான்கு
மாதங்கள் தங்கியிருந்து; மேய வெம் சேனை சூழ இனிது வீற்றிருந்த -
வந்து கூடிய விரும்பத் தக்க வானர சேனைகள் தன்னைச் சுற்றிலும் நிற்க
அவற்றின் நடுவில் இனிமையாக வீற்றிருந்த; வீரன் - மகாவீரனான
இராமபிரான்; இனி போய் நாடும் என்ன - நீங்கள் இனி சென்று சீதையைத்
தேடுங்கள் என்று கட்டளையிட; போந்தனம் - நாங்கள் தேடி வந்தோம்;
புகுந்தது ஈது என்று - நடந்த காரியம் இது என்று; ஏயவன் தூதன்
சொன்னான் -
இராமபிரானால் ஏவப்பட்ட தூதுவனாகிய அனுமன்
சொன்னான்; இராவணன் இதனை சொன்னான் - அதனைக் கேட்ட
இராவணன் இந்த வார்த்தையைச் சொல்லலானான்.

      இராமபிரான் தூதுஅனுப்பிய வரலாறு சுருக்கிக் கூறப்பட்டது.    (87)