சுக்கிரீவன்முதலியோரை இராவணன் இகழ்ந்து பேசுதல்

 5892.

'உம் குலத்தலைவன், தன்னோடு ஒப்பு இலா
                           உயர்ச்சியோனை
வெங் கொலைஅம்பின் கொன்றார்க்கு
                 ஆள்-தொழில் மேற்கொண்டீரேல்,
எங்குஉலப்புறும் நும் சீர்த்தி் ? நும்மொடும்
                          இயைந்தது என்றால்,
மங்குலின்பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து
                           மாதோ !

     உம் குலத்தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சி யோனை -
உங்கள்வானரக் குலத்தலைவனாக இருத்தலோடு ஒப்பற்ற மேன்மை
உடையவனுமான வாலியை; வெம் கொலை அம்பின் கொன்றாற்கு -
கொடிய கொலை செய்யும் அம்பினால் கொன்ற இராமனுக்கு; ஆள் தொழில்
மேற் கொண்டீரேல் -
அடிமையாதல் தொழிலையும் ஏற்றுக்
கொண்டீர்களானால்; எங்கு உலப்புறும் நும் சீர்த்தி - உங்கள் புகழ் எங்கே
சென்று முடிவதோ?; நும்மொடும் இயைந்தது என்றால் - அப்புகழ்
உங்களோடு இயைவதே என்று உலகம் கூறுமானால்; மங்குலின் பொலீந்த
ஞாலம் மாதுமை உடைத்து -
மேகத்தினால் வளம்பெற்று விளங்குகின்ற
இந்தஉலகம் பெண் தம்மை உடையதேயாம்.

     தன் அரசனைக்கொன்றவனுக்கு ஆட்பட்டிருத்தல் இழிவுடையோர்
செயல் என்பதை எதிர் மறைப் பொருளில் வஞ்சப்புகழ்ச்சியாக இராவணன்
நிந்தித்தான் என்க. மாதுமை - மாதரின் தன்மை; பெண்தன்மை.        (88)