5896. | ' "வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம் சிறிதும்நோக்கலை; தீமை திருத்தினாய்; இறுதி உற்றுளது;ஆயினும், இன்னும் ஓர் உறுதி கேட்டி;உயிர் நெடிது ஓம்புவாய் ! |
வாழ்க்கையைவறிது வீழ்த்தனை - உனது செல்வவாழ்வைவீணே கெடுத்துக் கொண்டாய்; மன் அறம் சிறிதும் நோக்கலை - அழியாது நிற்கும் அற நெறியை சிறிதும் நோக்கினாயல்லை; தீமை திருத்தினாய் - பாவச் செயல்களை வளர்த்துவிட்டனை; இறுதி உற்றுளது ஆயினும் - உனக்கு அழிவு நெருங்கி உள்ளது; ஆனாலும்; இன்னும் - இந்த நிலையிலும்; ஓர் உறுதி கேட்டி - யான் கூறும் நன்மைதரத்தக்கதைக் கேட்பாயாக; உயிர் நெடிது ஓம்புவாய் - (கேட்டு அதன்படி நடப்பாயானால்) உயிரை நெடுங்காலம் பாதுகாத்துக் கொள்வாய். (92) |