5898.

' "இன்றுவீந்தது; நாளை, சிறிது இறை
நின்று வீந்தது;அலால், நிறை நிற்குமோ ?
ஒன்று வீந்தது,நல் உணர் உம்பரை
வென்று வீங்கியவீக்கம், மிகுத்ததால்.

     நல் உணர்உம்பரை - நல்ல அறிவுடைய தேவரை;வென்று வீங்கிய
வீக்கம் மிகுத்ததால் -
வெற்றி கொண்டு, அதனால் எழுந்த பூரிப்பு (செருக்கு)
எல்லை மீறியதால்; ஒன்று வீந்தது - ஒப்பற்றதாகிய வாழ்வின் பெருமை
(உங்களை விட்டு முன்னரே) நீங்கிவிட்டது; இறை இன்று வீந்தது -
எஞ்சியுள்ள உங்கள் பெருமை இன்றைய நாளிலேயே (பெரும் பான்மையும்)
அழிந்து போய்விட்டது; சிறிது - மற்றை எஞ்சியுள்ள சிறுபான்மையும்; நின்று
நாளை -
இன்றைக்கு நின்று நாளை; வீழ்வது அலால் -
அழிவதேயாகுமல்லாமல்; நிறை நிற்குமோ ? - அழிவின்றி நிலைத்து
நிற்குமோ ? (நில்லாது என்றபடி);

    'இன்று இறந்தனநாளை இறந்தன' என்று, இராவணன் பிராட்டியைப்
பார்த்துக் கூறியதை நினைவூட்டுகின்றது முதல் அடி. வீக்கம் - செல்வம்'
என்பது பழைய உரை.                                     (94)