5929. | 'அந்தநகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர் சிந்த நூறி,சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப வந்த குரங்கிற்குஉற்றதனை, வம்மின், காண வம்' என்று, தம்தம் தெருவும்,வாயில்தொறும், யாரும் அறியச் சாற்றினார். |
அந்த நகரும்கடிகாவும் அழிவித்து - (இராவணனின்ஏவலர்கள்) இலங்கை நகரையும் காவல் மிகுந்த அசோகவனம் என்னும் சோலையையும் அழியச் செய்தும்; அக்கன் முதலாயோர் சிந்த நூறி - அக்ககுமாரன்முதலிய சிறந்த அரக்கர்களை சிதறி அழியக் கொன்றும்; சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப வந்த - சீதையுடன் தனியே பேசியும், அற்ப மனிதர்களது வலிமையைச் சொல்லவும் இராவணனிடத்து வந்த; குரங்கிற்கு உற்றதனை - இந்தக் குரங்குக்கு நேர்ந்த துன்ப நிலையை; காண வம்மின் வம் என்று - பார்ப்பதற்கு வாருங்கள் வாருங்கள் என்று; தம் தம் தெருவும் வாயில் தொறும் - தத்தம் வீதிகளிலும்வீட்டு வாயில்கள் எல்லாவற்றிலும்; யாரும் அறிய சாற்றினார் - அனைவரும்அறியும்படிக் கூறினார்கள். இராவணனுடையஏவலர்கள், குரங்குக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலையைக் காண வருமாறு அனைவரையும்அழைத்தனர் என்க. (125) |