அறுசீர் ஆசிரியவிருத்தம் 5933. | மற்றுஇனிப் பல என் ? வேலை வட அனல், புவி அளாய கற்றை வெங்கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும் முற்றுறு மும்மைச்செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட கொற்றவன்நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. |
வேலை வட அனல் -கடலில்உள்ள வடவாமுகாக் கினியும்; புவி அளாய கற்றை வெம் கனலி மற்றை காயத் தீ - பூமியில் பொருந்திய தொகுதியாகிய வெப்பம் உள்ள நெருப்பும், அதுவல்லாதவானத்தில் அமைந்த நெருப்பும்; முனிவர் காக்கும் முற்றுறுமும்மை செந்தீ - முனிவர்கள் காத்து வளர்க்கும் (வைதிக நியமம்) நிறைவேறற்குஉரிய மூன்றுவகை அக்கினிகளும்; முப்புரம் முருங்க சுட்ட கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் - அசுரர்களுடைய திரிபுரங்கள் அழியச் சுட்டெரித்த வெற்றியை உடைய சிவபிரானது நெற்றிக் கண்ணிடத்தும் பொருந்தியுள்ள நெருப்பும்; குளிர்ந்த - குளிர்ச்சியை அடைந்தன; மற்று இனிப்பல என் - இனிப்பல சொல்வது என்ன இருக்கிறது?; அன்று, ஏ - அசைநிலைகள் (129) |