விசும்பில்பொலிந்த அனுமன் தோற்றம் 5938. | இற்ற வாள்அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார், முற்றினார் உலந்தார்; ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம் பற்றிய கலுழன்என்ன, பொலிந்தனன் விசும்பின் பாலான். |
இற்றவாள்அரக்கர் நூறு ஆயிரவரும் - தனிப்பட்டு விழுந்த கொடியஅந்த அரக்கர் நூறாயிரம் பேரும்; இழந்த தோளார் முற்றினார் உலந்தார் -தோள்களை இழந்தவர்களாய் உயிர் முடிந்து இறந்தார்கள்; ஐயன் - அனுமன்;மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் - தோள்களோடுஉடம்பையும் அழுந்தக் கட்டிய கயிற்றினுடனே; விசும்பின் பாலான்தோன்றுவான்- ஆகாயத்திடத்துக் காணப்படுபவனாய்; அரவின் சுற்றம்பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் - பாம்பின் கூட்டம் பற்றிய கருடனைப் போல விளங்கினான். கயிறுகளால்கட்டுண்டு வானில் விளங்கிய அனுமனுக்கு, அரவுகளால் சுற்றப்பட்டு வானில் பறக்கும் கருடன் உவமை. மொய்ம்பு - தோள். 'பூந்தாது மொய்ம் பினவாக' (கலித் தொகை 88:2) (134) |