5951. | மீது இமம்கலந்தாலன்ன வெம் புகை, சோதி மங்கலத்தீயொடு சுற்றலால், மேதி மங்குலின்வீழ் புனல், வீழ் மட ஓதிமங்களின்,மாதர் ஒதுங்கினார். |
மீது இமம்கலந்தால் அன்ன வெம்புகை - மேலே பனி கலந்தது போல் தோன்றும் கொடிய புகை; சோதி மங்கலம் தீயொடும் சுற்றலால் - ஒளியுள்ள மங்களகரமான நெருப்பினுடன் சூழ்ந்து கொண்டதனால்,; மேதி - (அஞ்சிய) எருமைகள்; மங்குலின் - மேகத்தைப் போன்று; வீழ் புனல் வீழ் -விரும்பத்தக்க நீர் நிலைகளில் விரைந்து விழ; மாதர் - (அங்கு விளையாடிக் கொண்டிருந்த) மகளிர்கள், (எருமைகள் விழுதலால் அஞ்சி); மட ஓதி மங்களின் ஒதுங்கினர் - இளமையான அன்னங்களைப் போல அவ்விடத்தை விட்டு நீங்கினார்கள். வீழ் -விருப்பம்; இரண்டாவது 'வீழ்' என்பது 'வீழ' என்பதன் வீகாரம். இமம் - பனி; மேதி - எருமை; மங்குல - மேகம்; ஓதிமம் - அன்னப் பறவை. (9) |