எரியையும்அனுமனையும் பற்றி வர இராவணன் கட்டளை இடுதல் வஞ்சித் துறை 5989. | 'உண்டநெருப்பைக் கண்டனர்பற்றிக் கொண்டு அணைக'என்றான்- அண்டரைவென்றான். |
அண்டரைவென்றான் - முன்பு தேவர்களைவென்றவனான இராவணன்; உண்ட நெருப்பை - இலங்கையை எரித்த அக்கினித்தேவனை; கண்டனர் பற்றி கொண்டு அணைக என்றான் - பார்த்தவர்கள் பிடித்துக் கொண்டு இங்கே வருவீர்களாக என்று ஆணையிட்டான். இராவணன் ஆணைக்குஅஞ்சியிருந்த அக்கினி தேவன், இப்போது, ஆணையை மீறிச் செயல்பட்டதனால், அவனைத் தண்டிக்க வேண்டி, பிடித்துக் கொண்டு வருமாறு அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான் என்பதாம். (47) |