5990.

'உற்றுஅகலாமுன்.
செற்ற குரங்கைப்
பற்றுமின்'என்றான்-
முற்றும்முனிந்தான்.

     முற்றும்முனிந்தான் - முழுவதும் சினந்தவனானஇராவணன்; செற்ற
குரங்கை -
இவ்வாறு தீங்கு இழைத்த குரங்கை; உற்று அகலாமுன் - அது,
நம் ஊரைவிட்டு நீங்குவதற்கு முன்பாக; பற்றுமின் - பிடித்து வாருங்கள்;
என்றான் -
என்று கட்டளையிட்டான்.                          (48)