5994.

விண்ணினை,வேலை விளிம்பு ஆர்
மண்ணினை, ஓடிவளைந்தார்;
அண்ணலை நாடிஅணைந்தார்;
கண்ணினின் வேறுஅயல் கண்டார்.

     விண்ணினை -வானத்தையும்;  வேலை விளிம்பு ஆர் மண்ணினை
-
கடலின் விளம்பிலே (ஓரத்திலே) பொருந்தியுள்ள இலங்கைப் பூமியையும்;
ஓடிவளைந்தார் -
ஓடிச் சென்று சூழ்ந்து கொண்டவர்களாய்;அண்ணலை
நாடி அணைந்தார் -
பெரியோனாகிய அனுமனைத் தேடி நெருங்கி; அயல்
வேறு கண்ணினின் கண்டார் -
ஒரு பக்கத்தில் (அனுமனை) தனியே (தமது)
கண்களால் பார்த்தார்கள்.                                   (52)