பிராட்டியின்திருவடிகளை வணங்கி, அனுமன் மீள, அழலும்மறைதல் 6003. | விட்டுஉயர் விஞ்சையர், 'வெந் தீ வட்ட முலைத் திருவைகும் புள் திரள்சோலை புறத்தும் சுட்டிலது' என்பதுசொன்னார். |
விட்டு உயர்விஞ்சையர் - அவ்விடம் விட்டு மேலேசென்ற வித்தியாதரர்; வெம் தீ - அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு, (அனைத்தையும் எரித்த நெருப்பு); வட்ட முலை திரு வைகும் புள் திரள் சோலை புறத்தும் சுட்டிலது - வட்டமான முலையை உடைய திருமகள் (சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக் கூட சுடவில்லை; என்பது சொன்னார் - என்ற செய்தியை வியப்பாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். (61) |