6024.

'மாண்டனள்அவள்; "இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்குஉரைத்தலின், விளிதல் நன்று"
                                    எனா,
பூண்டது ஓர் துயர்கொடு பொன்றினார்கொலோ ?
தேண்டினர்,இன்னமும் திரிகின்றார்கொலோ ?

     அவள் மாண்டனள்- (அதுவன்றி) அச்சீதை இறந்து விட்டாள்; இவள்
மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்கு உரைத்தலின் -
'இந்த சீதா
பிராட்டி இறந்த செய்தியைத் திரும்பிச் சென்று அந்த இராமபிரான்
முதலியவர்களுக்குச் சொல்லுவதிலும்; விளிதல் நன்று எனா - நாம் இறந்து
போதலே நல்லது' என்று எண்ணி; பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்
கொலோ? -
மேற்கொண்டதொரு துன்பத்தினால் (அவ்வனுமன் முதலானோர்)
இறந்தார்களோ ?; இன்னமும் தேண்டினர் திரிகின்றார்களோ ? - (அன்றி)
இன்னும், தேடினவர்களாய் வேறுபல இடங்களிலும் அலைகின்றார்களோ ?.

      இராமபிரான்ஐயப்பாடு, மேலும் நீளுகின்றது.               (18)