6030. | ஆங்கு அவன்செய்கையே அளவை ஆம் எனா, ஓங்கியஉணர்வினால், விளைந்தது உன்னினான்; வீங்கின தோள்;மலர்க் கண்கள் விம்மின; நீங்கியது அருந்துயர்; காதல் நீண்டதே. |
ஆங்கு அவன்செய்கையே - (இராமபிரான்)அவ்விடத்தில் அனுமன் செய்த குறிப்பான செயலே; அளவை ஆம் எனா - பிராட்டியின் நன்னிலையை அறிந்து கொள்வதற்கு அளவு கருவியாகும் என்று; ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் - சிறந்த (தனது குறிப்பறியவல்ல) அறிவினால் அங்கு நடந்த செய்திகளைநுட்பமாய் அறிந்து கொண்டான்; தோள் வீங்கின - அந்த மகிழ்ச்சியினால், பெருமானது தோள்கள் பூரித்தன; மலர்க்கண்கள் விம்மின - தாமரை மலர் போன்ற கண்கள் ஆனந்த நீர் பெருகப் பெற்றன;அருந்துயர் நீங்கியது - அவனது நீங்குதற்கு அருமையான துன்பமும்நீங்கிற்று; காதல் நீண்டது - பிராட்டிபால் கொண்ட அன்பும் வளர்வதாயிற்று. (24) |