6044.

'ஆயிடை,அணங்கின் கற்பும், ஐய ! நின் அருளும்
                            செய்ய
தூய நல் அறனும்என்று, இங்கு இனையன
                            தொடர்ந்து காப்ப,
போயினன்,அரக்கமாரை, "சொல்லுமின் பொதுவின்"
                           என்று, ஆங்கு
ஏயினன்; அவர்எலாம் என் மந்திரத்து
                            உறங்கியிற்றார்.

     ஐய ! -ஐயனே!; ஆயிடை அணங்கின் கற்பும் - அப்பொழுது
பிராட்டியின் கற்புத் திண்மையும்; நின் அருளும் செய்ய தூய நல் அறனும்
-
உனது அருளின் சிறப்பும் செம்மையும், தூய்மையும் நன்மையும் நிறைந்த
அறமும்; என்று இனையன தொடர்ந்து காப்ப - என்று சொல்லத்தக்க
இவைகள் எல்லாம் பிராட்டியின் உயிரை விடாமல் பாதுகாக்க; ஆங்கு -
அப்பொழுது, (இராவணன்); அரக்கிமாரை - (அருகில்  காவல் செய்து
கொண்டிருக்கும்) அரக்கியர்களை; பொதுவின் சொல்லுமின் - நன்மை
விளைதலும் தீய பயத்தலுமான வார்த்தைகளைப் பொதுப் படக் கூறுங்கள்;
என்று ஏயினன் -
என்று கட்டளையிட்டு;  போயினன் - விட்டுத்
தன்னிடத்துக்குச் சென்றான்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார்
-
அந்த அரக்கியரெல்லாம் நான் உச்சரித்த மந்திரத்தின் வலிமையால்
தூங்கிவிட்டார்கள்.

     அனுமன்,பிராட்டியைத் தான் கண்டு பேசுவதற்குக் கிடைத்த
வாய்ப்பினை விவரிக்கின்றான். கோறல் மேற்கொண்டுவிட்ட இராவணனது
கொடுமையினின்றும், பிராட்டியைக் காத்த சக்திகளையும் அனுமன்
விவரித்துள்ளான். 'என்று இங்கு' - இங்கு

     இசை நிறைக்க வந்தஅசை நிலை.                         (38)