பக்கம் எண் :

பக்கம் எண் :300

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

145--54. துவதிகன் உரைக்கும்-கந்திற்பாவை கூறும், சொல்லலும் சொல்லுவேன் - சொல்லுதலுஞ் செய்வேன், வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் - இளங்கொடி நல்லாய் மேல் நிகழ்வதைக் கேட்பாயாக, மன்னுயிர் நீங்க மழைவளம் கரந்து - மிகுதியான உயிர்கள் நீங்குமாறு மழைவளம் மறைந்து, பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய - பொன்மதில் சூழ்ந்த காஞ்சிநகர் அழகுகெட, ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்ஈங்கு இம்முதியாள் இடவயின் வைத்த - அதனைக் கேள்வியுற்று ஈண்டுச் சம்பாபதி கோயிலுள் வைத்திருக்கின்ற அரிய உயிர் மருந்தாய, தெய்வப் பாத்திரம்செவ் விதின் வாங்கி-கடவுட் கடிஞையைச் செவ்வனே கையிற்கொண்டு, தையல் நிற் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்குளன் ஆதலின் - நங்காய் நின் அன்னையருடன் சென்று அறவணவடிகளும் அந் நகரத்துள்ளமையான், செறிதெடி காஞ்சிமாநகர் சேர்குவை - நீயும் காஞ்சிமாநகரத்தை அடைகுவாய் ;

ஆங்கது கேட்டும், அறவணன் ஆங்குளனாதலானும் காஞ்சிமாநகர் சேர்குவை யென்க.

155-8. அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப் பிறவணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி - அறவணவடிகளுடைய அருளினால் அவ் வூரில் நீ நினது ஆண்வேடத்தை நீங்கி நின் இயல்பினையுடையையாய், வறன் ஓடு உலகின் மழைவளம் தரூஉம் - வற்கடமாகிய காலம் பரந்த உலகின்கண் மழைவளத்தை அளிக்கும், அறன் ஓடு ஏந்தி ஆயிருர் ஓம்புவை - அறவோடாகிய அமுத சுரபியை ஏந்தி அரிய உயிர்களைப் பாதுகாப்பாய் ;

பிறவணம் - வேற்றுமதப் பற்றுமாம் வறன் ஓடு : ஓடுதல்- பரத்தல். மழைவளம் - மழையாலுண்டாகும் வளம் ; சோறு.

159--60. ஆய்தொடிக்கு அவ்வூர் அறனொடு தோன்றும் -நினக்கு அவ் வூரின்கன் அறத்தொடு உண்டாகும், ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள - ஏது நிகழ்ச்சிகள் மிகப் பல உள்ளன ;

161--72. பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் - வஞ்சி நகரில் பிற சமய உண்மைகளைக் கூறினோர் கொள்கைகள் அனைத்தையும், அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள் - அறவணவடிகளுக்கு நீ கூறிய அந்நாளில், தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து - தவமும் தன்மமும் சார்பினால் தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறவியறும் நெறியும் ஆகியவற்றை முறையால் உரைத்து - மற இருள் இரிய மன்னுயிர் எமுற - பாவமாகிய இருளானது ஓடவும் நிலைபெற்ற உயிர்கள் இன்பமுறவும், அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தியோடு - அறமாகிய ஒளியைப் பரப்பி அளவற்ற