பக்கம் எண் :

பக்கம் எண் :301

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை
 

சித்திகளுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும், செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக் காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரந்தை நீங்கேன் யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும் தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட் டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன் கூறுதலும் ;

சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும் பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும் இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் ''சார்பிற் றோற்றம்'' எனப்பட்டன; இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி; அணிமா முதலியன. தவம் முதலியவற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக என அவன் உரைத்தலுமென்க.

172--9. அவன் மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் - இயற்றுதற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர், கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும் பிறப்புக்களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண்பிறப்பாகத் தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன் தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்;

''உத்தர மகதத் துறபிறப் பெல்லாம்'' என்றமையால் ஆண்டுப் பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க ; தோன்றிக் களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன் என்றபடி.

180--90. இன்னுங் கேட்டியோ நன்னுதல் மடந்தை-நல்ல நெற்றியையுடைய மடந்தையே இன்னும் கேட்பாயாக. ஊங்கண் ஓங்கிய உரவோன்தன்னை - நின் குலத்தில் முன்னர் அறத்தான் மேம் பாடுற்றிருந்த அறிவுடையோன் ஒருவனை, வாங்குதிரை எடுத்த மணிமேகலா தெய்வம்-கடலின்க ணிருந்து எடுத்துக் காப்பாற்றிய