பொருளைப்பற்றி நின்று,
தான் பிறிதொரு குணத்தை யேலாது, தன்னையுடைய குணப்பொருட்கு ஏதுவாதலும், அதன்
யோக விபாகங்களால் திரிதலுமில்லது," என்று கணாதர் (வை. சூ. i. 1.
16) கூறுகின்றார். இக்கூறிய குணங்களுள் ஓசையாவது ஆகாயத்தன் குணம். ஊறென்பது
நிலம் நீர் காற்று என்ற மூன்றன் குணமாம்; இது உடலின் தோலால் உணரப்படும்.
நிறமென்பது, நிலம் நீர் ஒளியென்ற மூன்றன் குணமாகும்; இந்நிறம் வெண்மை நீலம்
பொன்மை செம்மை பசுமை கபிலம் சித்திரம் என எழுவகைப்படும். நாற்றமாவது,
நிலத்தின் குணமாய் மூக்கால் உற்றறியப்படுவதாம் ; இது நறு நாற்றம் தீ நாற்றமென
விருவகைத்து. சுவை யென்பது, நிலம் நீர் என்ற இரண்டின் குணமாய் நாவால் உணரப்படுவதாம்.
குண வகைகளுள் ஒசையொழித்த நான்குடன் "சங்கியை, பரிமாணம், பிரதக்துவம்,
சம்யோகம், விபாகம், பரத்துவம், அபரத்துவம், புத்தி, சுகம், துக்கம், இச்சை,
துவேஷம், பிரயத்னம்" என்ற பதின்மூன்றையுங் கூட்டிப் பிதினேழாக வைசேடிக
சூத்திரம் (i. 1. 6) கூறுகிறது; பதார்த்த தர்ம சங்கிரகம் என்னும்
நூல், அப்பதினேழுடன், "குருத்வம், திரவத்வம், சிநேகம், தருமம், அதருமம்,
சத்தம், சம்ஸ்காரம்'' (பக். 10) என்ற ஏழையுங்கூட்டி இருபத்துநான்காகக் கூறும்.
இவற்றிக்குப் பிற்போந்த தருக்கசங்கிரக தீபிகை முதலிய நூல்கள் மேற்கூறிய
குணங்கட்கு மறுதலையாயவற்றையும் கூட்டியுரைப்பனவாயின.
257--8. பொருளும் குணமும்-பொருளும் குணமும் என்ற இரண்டும்; கருமம்
இயற்றற்குரிய-செயல் நிகழ்த்தற்கு உரியவாம் எ - று.
கருமாமவது ஒரு குணமும் பற்றாது
பொருகின்கட் டங்கி அதன் புணர்வு பிரிவுகளின் காரியமாய் நிகழ்வதாம் (வை.
சூ. i 7) என்றும், ஆகாயமும் காலமும் திசையும் ஆன்மாவும் பொருளெனப் பட்டனவாயினும்
அருவமாதலின் கருமர் இயற்றற் குரிய வல்ல (வை. சூ. v. 2. 21) என்றும் கூறுவர்.
258--60. முதற் பொதுத்தான் உண்மை தரும் - முதன்மையான
பொதுவாவது பொருள்களின் உண்மைத் தன்னையை யுணர்த்துவதாம்; போதலும் நிற்றலும்
பொதுக்குண மாதலின் - போவதும் வருவதும் எல்லாப் பொருட்கும் முதன்மையில்லாத
பொதுக் குணமாதல்போல; சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்னை இறத்தலும் இருத்தலும்
அவ்வப் பொருள் முதன்மையில்லாத பொதுத்தன்மையாம் எ - று.
எனவே, பொதுமை முதற்பொது
என்றும் பொதுவென்றும் இருதிறப் படுமென்றும், உள்ளதாந்தன்மை எல்லாப் பொருட்கும்
முதற் பொதுத் தன்னை யென்றும், சிலவற்றிற்கே போக்குவரவு பொது வாதல்போல
இறத்தலூம் இருத்தலும் முதன்மையில்லாத பொதுத் தன்னை யென்றும் கூறியவாறு. முதற்பொதுவினைப்
பரசாமானிய |