முகப்பு |
தொடக்கம் |
காந்தருவ தத்தையார் இலம்பகம்
|
|
493. |
- இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழச்
-
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
-
பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர்
-
வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்
|
|
|
|
|
494. |
- மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
-
கொன் ஒழுகு வேல் யவ தத்தன் குளிர் தூங்கும்
-
தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல்
-
பொன் ஒழுகு குன்றில் உறை போர்ப் புலியொடு ஒப்பான்
|
|
|
|
|
495. |
- இம்மியன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கிக்
-
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
-
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
-
உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே
|
|
|
|
|
496. |
- உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
-
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை
-
தொள்ளை உணர் வின்னவர்கள் சொல்லின் மடிகிற்பின்
-
எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே
|
|
|
|
|
497. |
- செய்க பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும்
-
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும்
-
ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும்
-
பொய் இல் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே
|
|
|
|
|
498. |
- தூங்குசிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
-
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர்
-
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீச் சொல்
-
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான்
|
|
|
|
|
499. |
- மோது படுபண்டம் முனியாது பெரிது ஏற்றி
-
மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற
-
தாது படு தார் கெழிய தங்குவரை மார்பன்
-
கோது படல் இல்ல குறிக் கொண்டு எழுந்து போந்தான்
|
|
|
|
|
500. |
- வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்
-
தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
-
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி
-
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான்
|
|
|
|
|
501. |
- ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
-
ஈடுபடச் செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்க்
-
கோடு பறை ஆர்ப்பக் கொழுந் தாள் பவழம் கொல்லா
-
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே
|
|
|
|
|
502. |
- திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம்
-
கரை கடலுள் காலக் கணை பின் ஒழிய முந்நீர்
-
வரை கிடந்து கீண்டது எனக் கீறி வளர் தீவின்
-
நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ
|
|
|
|
|
503. |
- மின்னும் மிளிர் பூங் கொடியும்
-
மென் மலரும் ஒப்பார்
-
அன்னமொடும் தோகை நடை சாயல்
-
அமிர்து அன்னார்
-
துன்னி இனிது ஆக உறை
-
துப்புரவின் மிக்க
-
நன்மை உடை நல் பொன் விளை
-
தீவம் அடைந்தது அஃதே
|
|
|
|
|
504. |
- தீவினுள் இழிந்து தேந்தார்ச்
-
செம்மலும் திருமுத்தாரம்
-
கோவினைக் குறிப்பில் கண்டு
-
கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
-
பூவின் உள்ளவளை அன்ன
-
பொங்கு இள முலையினார்தம்
-
நாவினுள் அமிர்தம் கேட்டு
-
நாடகம் நயந்து சின்னாள்
|
|
|
|
|
505. |
- புணர்ந்தவர் பிரிதல் ஆற்றாப்
-
போகம் ஈன்று அளிக்கும் சாயல்
-
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு
-
அறுமதி கழிந்த பின்றைக்
-
கொணர்ந்தன பண்டம் விற்ற
-
கொழுநிதிக் குப்பை எல்லாம்
-
உணர்ந்து தன் மதலை ஏற்றி
-
ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்
|
|
|
|
|
506. |
- அரசனைக் கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
-
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறிக்
-
கரை கடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
-
உரை உடைக் காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே
|
|
|
|
|
507. |
- களித் தலை மயங்கி இப்பால்
-
இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
-
துளித் தலை முகில்கள் ஈண்டித்
-
தூங்கு இருள் மயங்கி மான்று
-
விளிப்பது போல மின்னி
-
வெடிபட முழங்கிக் கூற்றும்
-
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி
-
உரறி நின்று இடிப்ப நாய்கன்
|
|
|
|
|
508. |
- எண் திசை வளியும் ஈண்டி
-
எதிர் எதிர் கலாவிப் பவ்வம்
-
கொண்டு மேல் எழுவது ஒப்பக்
-
குளிறி நின்று அதிர்ந்து மேகம்
-
தண் துளி பளிக்குக் கோல் போல்
-
தாரையாய்ச் சொரிந்து தெய்வம்
-
கொண்டது ஓர் செற்றம் போலும்
-
குலுங்கன்மின் என்று கூறும்
|
|
|
|
|
509. |
- இடுக்கண் வந்து உற்ற காலை
-
எரிகின்ற விளக்குப் போல
-
நடுக்கம் ஒன்றானும் இன்றி
-
நகுக தாம் நக்க போழ்து அவ்
-
இடுக்கணை அரியும் எஃகாம்
-
இருந்து அழுது யாவர் உய்ந்தார்
-
வடுப்படுத்து என்னை ஆண்மை
-
வருப வந்து உறுங்கள் அன்றே
|
|
|
|
|
510. |
- ஆடகச் செம் பொன் கிண்ணத்து
-
ஏந்திய அலங்கல் தெண்ணீர்
-
கூடகம் கொண்ட வாழ் நாள்
-
உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
-
ஊடகம் புக்கு முந்நீர்
-
அழுந்தினும் உய்வர் நல்லார்
-
பாடகம் போலச் சூழ்ந்த
-
பழவினைப் பயத்தின் என்றான்
|
|
|
|
|
511. |
- வினை அது விளைவின் வந்த
-
வீவு அரும் துன்பம் முன்னீர்க்
-
கனை கடல் அழுவம் நீந்திக்
-
கண் கனிந்து இரங்கல் வேண்டா
-
நனை மலர்ப் பிண்டி நாதன்
-
நலம் கிளர் பாத மூலம்
-
நினையுமின் நீவிர் எல்லாம்
-
நீங்குமின் அச்சம் என்றான்
|
|
|
|
|
512. |
- பருமித்த களிறு அனானும்
-
பை எனக் கவிழ்ந்து நிற்பக்
-
குருமித்து மதலை பொங்கிக்
-
கூம்பு இறப் பாய்ந்து வல்லே
-
நிருமித்த வகையின் ஓடி
-
நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
-
உரும் இடித்து இட்டது ஒப்ப
-
உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்
|
|
|
|
|
513. |
- ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும்
-
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
-
கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் கொழித்துத்
-
தேம் பெற்ற பைந்தார் அவனைத் திரை உய்த்தது அன்றே
|
|
|
|
|
514. |
- நாவாய் இழந்து நடு ஆரும் இல் யாமம் நீந்திப்
-
போவாய் தமியே பொருளைப் பொருள் என்று கொண்டாய்
-
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
-
பாவாய் எனப் போய்ப் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்
|
|
|
|
|
515. |
- பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
-
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
-
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்தாங்கு
-
அருவரை மார்பன் அவலித்து இருந்தான்
|
|
|
|
|
516. |
- ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
-
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
-
நீடிய நெய்தல் அம் கானல் நெடுந் தகை
-
வாடி இருந்தான் வரும்கலம் நோக்கா
|
|
|
|
|
517. |
- ஆளிய மொய்ம்பன் இரும் தவப் பூம் பொழில்
-
தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டுக்
-
கேளிர் எனக்கு உற்ற கேண்மின் நீர் எனத்
-
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்
|
|
|
|
|
518. |
- கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
-
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
-
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
-
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்
|
|
|
|
|
519. |
- மானும் மரனும் இரங்க மத வலி
-
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
-
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
-
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்
|
|
|
|
|
520. |
- விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
-
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
-
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
-
நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான்
|
|
|
|
|
521. |
- உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
-
வரை அகம் ஏற வலிமின் என்னா
-
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றிக்
-
குரை கழல் மைந்தனைக் கொண்டு பறந்தான்
|
|
|
|
|
522. |
- விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
-
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
-
நயந்தனர் போகி நறு மலர்ச் சோலை
-
அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார்
|
|
|
|
|
523. |
- கண்டால் இனியன காண்டற்கு அரியன
-
தண் தாமரை அவள் தாழும் தகையன
-
கொண்டான் கொழுங் கனி கோட்டு இடைத் தூங்குவ
-
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்
|
|
|
|
|
524. |
- மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
-
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
-
தழை தவழ் சந்தனச் சோலையின் நோக்கி
-
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்
|
|
|
|
|
525. |
- கோதை அருவிக் குளிர் வரை மேல் நின்று
-
காதம் கடந்த பின் கன்னிக் கொடிமதில்
-
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்குப்
-
போதும் எழுக எனப் போயினர் சார்ந்தார்
|
|
|
|
|
526. |
- மேகமே மிடைந்து தாழ இருள்
-
கொண்ட வெள்ளிக் குன்றம்
-
மாகத்து விளங்கித் தோன்றும்
-
வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
-
நாகம் தான் கரியது ஒன்று கீழ்
-
நின்று நடுங்கக் கவ்விப்
-
பாகமே விழுங்கப் பட்ட
-
பால் மதி போன்றது அன்றே
|
|
|
|
|
527. |
- துளங்கு பொன் நகரின் தன்மை
-
சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
-
விளங்கு பொன் உலகத்து உள்ள
-
துப்புரவு இடங்கள் எல்லாம்
-
அளந்து கொண்டு இன்பம் பூரித்து
-
அணி நகர் ஆக்கி மேலால்
-
இளங் கதிரப் பருதி சூட்டி
-
இயற்றியது என்னல் ஆமே
|
|
|
|
|
528. |
- பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
-
செங் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
-
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
-
தங்குகின்றது போல் தகை சான்றதே
|
|
|
|
|
529. |
- கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூங் கொடி
-
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
-
உடங்கு வெண்மதி உள் குளிரத் தம்
-
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே
|
|
|
|
|
530. |
- திருவ மேகலை தௌளரிக் கிண் கிணி
-
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
-
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
-
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே
|
|
|
|
|
531. |
- செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
-
அம் பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள்
-
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
-
பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே
|
|
|
|
|
532. |
- உருளி மாமதி ஓட்டு ஒழிதள்து ஓங்கிய
-
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
-
மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து
-
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே
|
|
|
|
|
533. |
- அசும்பு பொன் வரை ஆய் மணிப் பூண்களும்
-
பசும் பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
-
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
-
விசும்பு பூத்தது போன்றன வீதியே
|
|
|
|
|
534. |
- தேன்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
-
ஆக்கப் பட்ட அளவில் கொழும் புகை
-
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
-
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே
|
|
|
|
|
535. |
- தப்பு இல் வாய் மொழித் தானவர் வைகிய
-
ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனில்
-
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச்
-
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே
|
|
|
|
|
536. |
- நல் நகர் நோக்கி நாய்கன்
-
நாகம் கொல் புகுந்தது என்னப்
-
பொன்னகர் பொலிய புக்குப்
-
பொங்குமா மழைகள் தங்கும்
-
மின் அவிர் செம் பொன் மாடத்து
-
இருவரும் இழிந்து புக்குப்
-
பின் அவன் விருந்து பேணிப்
-
பேசினன் பிறங்கு தாரான்
|
|
|
|
|
537. |
- மாடியம் தானை மன்னர்
-
மா மணி நாகம் ஆகக்
-
கேடு இல் சீர்க் கலுழன் ஆய
-
கலுழ வேகற்குத் தேவி
-
தோடு அலர் கோதைத் தொல் சீர்த்
-
தார் அணி சுரும்பு உண் கண்ணி
-
ஆடவர் அறிவு போழும்
-
அணி முலை அணங்கின் அன்னாள்
|
|
|
|
|
538. |
- விண் அகம் வணங்க வெண் கோட்டு
-
இளம் பிறை முளைத்ததே போல்
-
பண் அகத்து இனிய சொல்லாள்
-
பாவையைப் பயந்த ஞான்றே
-
எண் இடம் இன்றி மன்னர்
-
இம் மலை இறை கொண்டு ஈண்டி
-
அண்ணல் அம் களிற்றின் உச்சி
-
அருங் கலம் வெறுக்கை ஈந்தார்
|
|
|
|
|
539. |
- மந்திரத்து அரசன் வல்லே
-
நிமித்திகன் வருக என்றாற்கு
-
அந்தரத்து ஓடு கோளின்
-
சாதகம் அவனும் செய்தான்
-
இந்திரத் திருவில் ஏய்ப்பக்
-
குலவிய புருவத்தாட்கு
-
வந்து அடை பான்மை மண் மேல்
-
இராசமா புரத்து என்றான்
|
|
|
|
|
540. |
- அவன் உரை தெளிந்து வேந்தன்
-
ஆசையுள் அரசர் நிற்பக்
-
கவனம் கொள் புரவிக் கொட்பின்
-
காதலும் கரந்து வைத்தான்
-
அவன் அதே கருத்திற்று ஆம் கொல்
-
அன்று கொல் அறியல் ஆகாது
-
இவண் அதும் அறிதும் என்று
-
கோயிலுக்கு ஏகினானே
|
|
|
|
|
541. |
- பால் பரந்து அன்ன பட்டு ஆர்
-
பூ அணை பசும் பொன் கட்டில்
-
கால் பரந்து இருந்த வெம் கண்
-
கதிர் முலை கச்சின் வீக்கி
-
வேல் பரந்து அனைய கண்ணார்
-
வெண் மதிக் கதிர் பெய் கற்றை
-
போல் இவர் கவரி வீச
-
மன்னவன் இருந்த போழ்தின்
|
|
|
|
|
542. |
- என்வரவு இசைக்க என்ன
-
வாயிலோன் இசைப்ப ஏகி
-
மன்னர் தம் முடிகள் வேந்த
-
வயிரம் போழ்ந்து உழுது சேந்த
-
பொன் அவிர் கழல் கொள் பாதம்
-
பொழி மழைத் தடக்கை கூப்ப
-
இன் உரை முகமன் கூறித்
-
தானத்தில் இருக்க என்றான்
|
|
|
|
|
543. |
- முதிர் பெயல் மூரி வானம்
-
முழங்கி வாய் விட்டது ஒப்ப
-
அதிர் குரல் முரசம் நாண
-
அமிர்து பெய் மாரி ஏய்ப்பக்
-
கதிர் விரி பூணினாற்குத்
-
தந்தை தாய் தாரம் காதல்
-
மதுர மா மக்கள் சுற்றம் வினவி
-
மற்று இதுவும் சொன்னான்
|
|
|
|
|
544. |
- இன்றையது அன்று கேண்மை
-
எமர் நுமர் எழுவர் காறும்
-
நின்றது கிழமை நீங்கா
-
வச்சிர யாப்பின் ஊழால்
-
அன்றியும் அறனும் ஒன்றே
-
அரசன் யான் வணிகன் நீயே
-
என்று இரண்டு இல்லை கண்டாய்
-
இது நினது இல்லம் என்றான்
|
|
|
|
|
545. |
- மந்திர மன்னன் சொல் நீர்
-
மாரியால் வற்றி நின்ற
-
சந்தனம் தளிர்த்ததே போல்
-
சீதத்தன் தளிர்த்து நோக்கி
-
எந்தைக்குத் தந்தை சொன்னான்
-
இன்னணம் என்று கேட்ப
-
முந்தைத் தான் கேட்ட வாறே
-
முழுது எடுத்து இயம்புகின்றான்
|
|
|
|
|
546. |
- வெள்ளி வேதண்டத்து அம் கண்
-
வீவில் தென் சேடிப் பாலில்
-
கள் அவிழ் கைதை வேலிக்
-
காசு இல் காந்தார நாட்டுப்
-
புள் அணி கிடங்கின் விச்சா
-
லோகமா நகரில் போகா
-
வெள்ளி வேல் கலுழ வேகன்
-
வேதண்ட வேந்தர் வேந்தன்
|
|
|
|
|
547. |
- சங்கு உடைந்த அனைய வெண்
-
தாமரை மலர்த் தடங்கள் போலும்
-
நம் குடித் தெய்வம் கண்டீர்
-
நமரங்காள் அறிமின் என்னக்
-
கொங்கு உடை முல்லைப் பைம் போது
-
இருவடம் கிடந்த மார்ப
-
இங்கு அடி பிழைப்பது அன்றால்
-
எம் குலம் என்று சொன்னான்
|
|
|
|
|
548. |
- பெருந் தகைக் குருசில் தோழன்
-
பெருவிலைக் கடகம் முன்கை
-
திருந்துபு வணங்கப் பற்றிச்
-
சென்று தன் உரிமை காட்டப்
-
பொருந்துபு பொற்ப ஓம்பிப்
-
பொன் இழை சுடர நின்ற
-
கருங் கண்ணி திறத்து வேறாக்
-
கட்டுரை பயிற்று நின்றான்
|
|
|
|
|
549. |
- எரி மணிப் பளிக்கு மாடத்து
-
எழுந்தது ஓர் காமவல்லி
-
அரு மணிக் கொடிகொல் மின்கொல்
-
அமரர் கோன் எழுதி வைத்த
-
ஒரு மணி குயின்ற பாவை
-
ஒன்றுகொல் என்று நாய்கன்
-
திரு மணிக் கொடியை ஓரான்
-
தெருமர மன்னன் சொன்னான்
|
|
|
|
|
550. |
- தூசு உலாய்க் கிடந்த அல்குல்
-
துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்
-
வாச வான் குழலின் மின் போல்
-
வரு முலைச் சாந்து நக்கி
-
ஊசல் பாய்ந்து ஆடிக் காதில்
-
குண்டலம் இலங்க நின்றாள்
-
காசு இல் யாழ்க் கணம் கொள் தெய்வக்
-
காந்தர்வ தத்தை என்பாள்
|
|
|
|
|
551. |
- விளங்கினாள் உலகம் எல்லாம்
-
வீணையின் வனப்பினாலே
-
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு
-
அருமணி முகிழ்த்தவே போல்
-
இளம் கதிர் முலையும் ஆகத்து
-
இடம் கொண்டு பரந்த மின்னின்
-
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது
-
உரு அரு என்ன உண்டே
|
|
|
|
|
552. |
- நின் மகள் இவளை நீயே
-
நின் பதிக் கொண்டு போகி
-
இன் இசை பொருது வெல்வான்
-
யாவனே யானும் ஆக
-
அன்னவற்கு உரியள் என்ன
-
அடிப் பணி செய்வல் என்றான்
-
தன் அமர் தேவி கேட்டுத்
-
தத்தைக்கே தக்கது என்றாள்
|
|
|
|
|
553. |
- முனிவு அரும் போக பூமிப்
-
போகம் முட்டாது பெற்றும்
-
தனியவர் ஆகி வாழ்தல்
-
சாதுயர் அதனின் இல்லை
-
கனி படு கிளவியார் தம்
-
காதலர் கவானில் துஞ்சின்
-
பனி இரு விசும்பில் தேவர்
-
பான்மையிற்று என்று சொன்னான்
|
|
|
|
|
554. |
- நூல் படு புலவன் சொன்ன
-
நுண்பொருள் நுழைந்து யானும்
-
வேல் கடல் தானை வேந்தர்
-
வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
-
சேல் கடை மதர்வை நோக்கின்
-
சில்லரித் தடங் கண் நங்கை
-
பால் படு காலம் வந்தால்
-
பான்மை யார் விலக்குகிற்பார்
|
|
|
|
|
555. |
- படைப்பு அருங் கற்பினாள் தன்
-
பாவையைப் பரிவு நீக்கிக்
-
கொடைக்கு உரிப்பால எல்லாம்
-
கொடுத்த பின் கூற்றும் உட்கும்
-
விடைப்பு அருந் தானை வேந்தன்
-
வேண்டுவ வெறுப்ப நல்கித்
-
தொடுத்து அலர் கோதை வீணா
-
பதிக்கு இது சொல்லினானே
|
|
|
|
|
556. |
- உடம்பினொடு உயிரில் பின்னி
-
ஒருவயின் நீங்கல் செல்லா
-
நெடுங் கணும் தோளும் போலும்
-
நேர் இழை அரிவை நீ நின்
-
தடங் கணி தனிமை நீங்கத்
-
தந்தையும் தாயும் ஆகி
-
அடங்கு அலர் அட்ட வேலான்
-
ஆணையிர் ஆமின் என்றான்
|
|
|
|
|
557. |
- அரு மணி வயிரம் வேய்ந்த
-
அருங் கலப் பேழை ஐந்நூறு
-
எரிமணி செம்பொன் ஆர்ந்த
-
ஈர் ஆயிரம் யவனப் பேழை
-
திருமணி பூணினாற்குச் சினம்
-
தலை மழுங்கல் இன்றிக்
-
குரு மணி முடியின் தேய்த்த
-
தரன் தமர் கொள்க என்றான்
|
|
|
|
|
558. |
- பல் வினைப் பவளப் பாய் கால்
-
பசுமணி இழிகை வம்பு ஆர்
-
நல் அகில் விம்மு கட்டில்
-
தவிசொடு நிலைக் கண்ணாடி
-
மெல்லிய தூபமுட்டி
-
மேதகு நானச் செப்போடு
-
அல்லவும் கொள்க என்றான்
-
அணங்கு உடை நிணம் கொள் வேலான்
|
|
|
|
|
559. |
- விளக்கு அழல் உறுத்த போலும்
-
விசி உறு போர்வைத் தீம் தேன்
-
துளக்கு அற ஒழுகி அன்ன
-
துய்யறத் திரண்ட திண்கோல்
-
கொளத்தகு திவவுத் திங்கள்
-
கோள் நிரைத்து அனைய ஆணி
-
அளப்ப அருஞ் சுவை கொள் நல் யாழ்
-
ஆயிரம் அமைக என்றான்
|
|
|
|
|
560. |
- அரக்கு எறி குவளை வாள் கண்
-
அவ் வளைத் தோளினாளைப்
-
பரப்பு அமை கதல் தாயர் பற்பல்
-
கால் புல்லிக் கொண்டு
-
திருப் புறக் கொடுத்த செம் பொன்
-
தாமரை போன்று கோயில்
-
புரிக் குழல் மடந்தை போகப்
-
புலம்பொடு மடிந்தது அன்றே
|
|
|
|
|
561. |
- காம்பு பொன் செய்த பிச்சம்
-
கதிர் மணிக் குடையொடு ஏந்தித்
-
தாம் பலர் கவரி வீசக்
-
கிண்கிணி ததும்ப நாகப்
-
பாம்பு பைத்த அனைய அல்குல்
-
பல்கலை மிழற்ற ஏகி
-
ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய்
-
அரசனைத் தொழுது நின்றாள்
|
|
|
|
|
562. |
- அடிக் கலம் அரற்ற ஏகி
-
அரும் பெறல் தாதை பாதம்
-
முடிக் கலம் சொரியச் சென்னி
-
இறைஞ்சலும் முரிந்து மின்னுக்
-
கொடிப் பல நுடங்கி ஆங்குத்
-
தோழியர் குழாத்துள் நிற்ப
-
அடுத்தனன் புல்லி வேந்தன்
-
ஆற்றுகிலாது சொன்னான்
|
|
|
|
|
563. |
- வலம்புரி ஈன்ற முத்தம்
-
மண்மிசை அவர்கட்கு அல்லால்
-
வலம்பரி பயத்தை எய்தாது
-
அனையரே மகளிர் என்ன
-
நலம் புரிந்த அனைய காதல்
-
தேவி தன் நவையை நீங்கக்
-
குலம் புரிந்து அனைய
-
குன்றிற்கு அதிபதி கூறினானே
|
|
|
|
|
564. |
- இன் சுவை யாழொடு அன்னம்
-
இளம் கிளி மழலை மஞ்ஞை
-
பொன் புனை யூகம் மந்தி
-
பொறி மயிர்ப் புறவம் பொன்னார்
-
மென் புனம் மருளின் நோக்கின்
-
மான் இனம் ஆதி ஆகத்
-
தன் புறம் சூழப் போகித்
-
தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்
|
|
|
|
|
565. |
- வெற்றி வேல் மணிமுடிக், கொற்றவன் ஒரு மகள்
-
அற்றம் இல் பெரும் படைச், சுற்றமோடு இயங்கினாள்
|
|
|
|
|
566. |
- கண் அயல் களிப்பன, அண்ணல் யானை ஆயிரம்
-
விண் அகத்து இயங்கு தேர், எண் அவற்று இரட்டியே
|
|
|
|
|
567. |
- வில்படை விலக்குவ, பொன்படைப் புரவியும்
-
முன்படக் கிளந்த அவற்றின், நல்புடைய நாற்றியே
|
|
|
|
|
568. |
- பாறு உடைப் பருதி வேல், வீறு உடை இளையரும்
-
ஆறு இரட்டி ஆயிரர், கூறுதற்கு அரியரே
|
|
|
|
|
569. |
- மாகம் நீள் விசும்பு இடை, மேகம் நின்று இடித்தலின்
-
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு, ஏகல் ஆவது இல்லையே
|
|
|
|
|
570. |
- வெம் சின வெகுளியில், குஞ்சரம் முழங்கலின்
-
மஞ்சு தம் வயிறு அழிந்து, அஞ்சி நீர் உகுத்தவே
|
|
|
|
|
571. |
- வேழம் மும் மதத்தொடு, தாழ் புயல் கலந்து உடன்
-
ஆழ் கடல் அகம் புறம், வீழ் தர விரைந்ததே
|
|
|
|
|
572. |
- மல்லல் மாக் கடல் இடைக், கல் எனக் கலம் கவிழ்த்து
-
அல்லல் உற்று அழுங்கிய, செல்வன் உற்ற செப்புவாம்
|
|
|
|
|
573. |
- பால் நிறப் பனி வரை, மேல் நிறம் மிகுத்தன
-
நீல் நிற நிழல் மணி, தான் நிரைத்து அகம் எலாம்
|
|
|
|
|
574. |
- வஞ்சம் இல் மனத்தினான், நெஞ்சு அகம் புகன்று உக
-
விஞ்சை அம் பெருமகன், வஞ்சம் என்று உணர்த்தினான்
|
|
|
|
|
575. |
- நங்கை தன் நலத்தினால், மங்குல் வெள்ளி மால்வரை
-
எங்கும் மன்னர் ஈண்டினர், சங்கு விம்மு தானையார்
|
|
|
|
|
576. |
- ஈர் அலங்கல் ஏந்து வேல், ஆர் அலங்கல் மார்பினான்
-
கார் கலந்த கைக் கணி, சீர் கலந்து செப்பினான்
|
|
|
|
|
577. |
- மாதர் வாழ்வு மண்ணதே, ஆதலால் அலங்கல் அம்
-
தாது அவிழ்ந்த மார்ப நின், காதலன் கடல் உளான்
|
|
|
|
|
578. |
- என்று கூற என்னையே, துன்று காதல் தோழனைச்
-
சென்று நீ கொணர்க என, அன்று வந்த வண்ணமே
|
|
|
|
|
579. |
- துன்பம் உற்றவர்க்கு அலால், இன்பம் இல்லை ஆதலின்
-
அன்ப மற்று யான் நினைத், துன்பத்தால் தொடக்கினேன்
|
|
|
|
|
580. |
- பீழை செய்து பெற்றனன், வாழி என்று மாக்கடல்
-
ஆழ்வித்து இட்ட அம்பியைத், தோழர்ச் சுட்டிக் காட்டினான்
|
|
|
|
|
581. |
- தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
-
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சைக்
-
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
-
கான்று வில் வயிரம் வீசும் கனமணிக் குழையினானே
|
|
|
|
|
582. |
- தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு காதல்
-
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவத் தார் குழையப் புல்லிப்
-
பாடிரும் பௌவம் முந்நீர்ப் பட்டது பகர்தலோடும்
-
நாடகம் நாங்கள் உற்றது என்று கை எறிந்து நக்கார்
|
|
|
|
|
583. |
- கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
-
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
-
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்க்
-
கட்டு அவிழ் தாரினான் தன் கடிமனை மகிழ்ந்து புக்கான்
|
|
|
|
|
584. |
- பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கித் தோன்றும்
-
திரு நுதல் மனைவி செம் பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
-
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரியப் புல்லிக்
-
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்
|
|
|
|
|
585. |
- சந்திர காந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
-
வெந்து எரி பசும் பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
-
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்திப்
-
பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே
|
|
|
|
|
586. |
- பாசிழைப் பரவை அல்குல் பசுங் கதிர்க் கலாபம் வீங்கக்
-
காசு கண் பரிய வைகிக் கடன் தலை கழிந்த பின்னாத்
-
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
-
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறியச் சொன்னான்
|
|
|
|
|
587. |
- வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேரத்
-
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்து வீங்கிப்
-
பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாளைக்
-
கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்தும் என்றான்
|
|
|
|
|
588. |
- மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
-
பால் வரை மணியும் பொன்னும் பற் பல கொண்டு புக்குக்
-
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
-
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்
|
|
|
|
|
589. |
- மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனாப்
-
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
-
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
-
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்
|
|
|
|
|
590. |
- நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்து இடை நன் பொன்
-
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
-
மீனத்து இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
-
கானத்து இடை வேங்கை எழக் கண்ணினர்கள் அன்றே
|
|
|
|
|
591. |
- நட்புப் பகை உட்கினொடு நன்பொன் விளை கழனி
-
பட்டினொடு பஞ்சு துகில் பைம் பொன்னொடு காணம்
-
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
-
ஒட்டிப் பதினாயிரவர் உற்று முயல்கின்றார்
|
|
|
|
|
592. |
- வண்டு படு தேறல் நறவு
-
வாய் விடொடு பருகிக்
-
கண்ட தொழில் கணிச்சிகளின்
-
கயம்பட நன்கு இடித்து ஆங்கு
-
எண்திசையும் ஏற்பப் படுத்து
-
ஏற்றி அதன் மேலால்
-
கண்டு உருகு பொன்னின்
-
நிலம் காமுறுவ புனைந்தார்
|
|
|
|
|
593. |
- பொன் செய் குடம் கோத்த அனைய
-
எருத்தில் பொலி பொன் தூண்
-
மின் செய் பசும் பொன் நிலத்து
-
வீறு பெற நாட்டி
-
மன் பவள மேல் நவின்று
-
பளிக்கு அலகு பரப்பி
-
நன் செய் வெளி வேய்ந்து சுவர்
-
தமனியத்தின் அமைத்தார்
|
|
|
|
|
594. |
- பாவை அவள் இருக்கும் இடம்
-
பளிக்குச் சுவர் இயற்றிக்
-
கோவை குளிர் முத்தின் இயல்
-
கோதையொடு கொழும் பொன்
-
மாலையொடு மாலை தலை
-
மணந்து வர நாற்றி
-
ஆலையம் இது ஓவியர்கட்கு
-
என்ன அணி அமைத்தார்
|
|
|
|
|
595. |
- ஆய் இதழ் பொன் அலங்கல்
-
கால் அசைப்ப ஒல்கி
-
வாய் அருகு வந்து ஒசித்து
-
மறிய மழை மின்போல்
-
சேயவர்க்கும் தோன்றியது ஓர்
-
திலகம் எனும் தகைத்தாய்
-
பாய திரை முத்த மணல்
-
பரந்து பயின்று உளதே
|
|
|
|
|
596. |
- காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
-
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
-
ஏம் உறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
-
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே
|
|
|
|
|
597. |
- உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
-
விழுங்கும் எனப் பறவைகளும் பிற விலங்கும் அடையா
-
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
-
எழுந்து கொடி ஆடும் இது அவ் எழில் நகரின் இயல்பே
|
|
|
|
|
598. |
- ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
-
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
-
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
-
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்
|
|
|
|
|
599. |
- கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
-
கொண்டு உலகம் ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும்
-
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
-
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே
|
|
|
|
|
600. |
- முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
-
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
-
பகல் கதிர்ப் பரப்பிற்று ஆகிப் பஞ்சவர் விமானம் முட்டிப்
-
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே
|
|
|
|
|
601. |
- அரைசனது அருளினொடு அகல்மனை அவன் எய்தி
-
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
-
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
-
விரை செலல் இளையரை வியவரின் விடவே
|
|
|
|
|
602. |
- விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
-
படு பணையவர் உறை பதி அது குறுகி
-
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
-
கடி நகர் இடி முரசு அறைமினம் எனவே
|
|
|
|
|
603. |
- மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
-
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
-
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
-
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்
|
|
|
|
|
604. |
- வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
-
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
-
ஊன்றுக ஊழிதோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
-
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்
|
|
|
|
|
605. |
- தவம் புரிந்து அடங்கி நோற்கும்
-
தத்துவர் தலைப்பட்டு ஓம்பிப்
-
பவம் பரிக எமக்கும் என்று
-
பணிந்து அவர் உவப்ப ஈமின்
-
அவம் புரிந்து உடம்பு நீங்காது
-
அருந் தவம் முயல்மின் யாரும்
-
சிவம்புரி நெறியைச் சேரச்
-
செப்பும் இப் பொருளும் கேள்மின்
|
|
|
|
|
606. |
- அம் மலர் அனிச்சத்து அம் போது
-
அல்லியோடு அணியின் நொந்து
-
விம் உறு நுசுப்பு நைய
-
வீற்று இருந்து அணங்கு சேர்ந்த
-
வெம் முலைப் பரவை அல்குல்
-
மிடை மணிக் கலாபம் வேய்த் தோள்
-
செம் மலர்த் திருவின் சாயல்
-
தேமொழி தத்தை என்பாள்
|
|
|
|
|
607. |
- மற்று அவள் தந்தை நாய்கன்
-
வண்கைச் சீதத்தன் என்பான்
-
கொற்றவன் குலத்தின் வந்தான்
-
கூறிய பொருள் இது ஆகும்
-
முன் தவம் உடையள் ஆகி
-
மூரி நூல் கலைகள் எல்லாம்
-
கற்றவள் கணம் கொள் நல் யாழ்
-
அனங்கனைக் கனிக்கும் நீராள்
|
|
|
|
|
608. |
- தீம் தொடை மகர வீணைத்
-
தெளி விளி எடுப்பித் தேற்றிப்
-
பூந் தொடி அரிவை தன்னில்
-
புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
-
ஈந்திடும் இறைவர் ஆதி
-
மூவகைக் குலத்து உளார்க்கும்
-
வேந்தடு குருதி வேல் கண்
-
விளங்கு இழை தாதை என்றான்
|
|
|
|
|
609. |
- மண்ணக மடந்தை ஆகம்
-
மார்பு உற முயங்கி நின்ற
-
அண்ணலை ஆதி ஆக
-
அருங் கடி நகரை வாழ்த்தி
-
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப
-
வீதிதொறும் எருக்கி எங்கும்
-
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி
-
கடிமுரசு அறைந்த காலை
|
|
|
|
|
610. |
- வணக்க அருந் தானை மன்னர்
-
மத்தகம் பிளந்து வாய்த்த
-
நிணம் கொழுங் குருதி வாள் கை
-
நிலம் புடை பெயர்க்கும் ஆற்றல்
-
அணைப்ப அரும் களிகொள்
-
வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
-
கணைக் கவின் அழித்த உண்கண்
-
கன்னியைக் கருதி வந்தான்
|
|
|
|
|
611. |
- சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின்
-
செய் கழல் நரல வீக்கி
-
மதக் களிறு அடர்த்துக் குன்றம்
-
மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
-
கதக் களி ஒளிறு வைவேல்
-
காம்பிலிக் காவல் மன்னன்
-
பதைப்பு அரும் பரும யானைப்
-
பாலமா குமரன் வந்தான்
|
|
|
|
|
612. |
- இலை பொர எழுதி அன்ன
-
எரிமணிக் கடக முன்கைச்
-
சிலை பொரத் திரண்ட திண்தோள்
-
சில்லரிச் சிலம்பினார் தம்
-
முலை பொர உடைந்த தண்தார்
-
மொய்ம் மதுத் துளிப்ப வந்தான்
-
மலை பொர அரிய மார்பின்
-
வாரண வாசி மன்னன்
|
|
|
|
|
613. |
- கதிர் முடி மன்னர் சூழ்ந்து
-
கை தொழுது இறைஞ்சி மாலைத்
-
திருமுடி வயிர வில்லால்
-
சேவடி திளைப்ப ஏத்தி
-
அருமுடி அணிந்த கொற்றத்து
-
அவந்தியன் முரசம் ஆர்ப்ப
-
ஒரு பிடி நுசுப்பினானை
-
உள்ளுபு வந்து விட்டான்
|
|
|
|
|
614. |
- வெள் அணி அணிந்த ஞான்றே
-
வேந்தர் தம் முடியில் கொண்ட
-
கள் அணி மாலை மோந்து
-
கனை கழல் இலங்கும் நோன் தாள்
-
புள் அணி கொடியினானின்
-
போர் பல தொலைத்த ஆற்றல்
-
அள் இலை அணிந்த வை வேல்
-
அயோத்தியர் இறையும் வந்தான்
|
|
|
|
|
615. |
- நீள் நிதி வணிகர் ஈறா
-
நிலமிசை அவர்கள் எல்லாம்
-
வீணையின் பொருது வெல்வான்
-
விரைவினர் துவன்றி மூதூர்க்
-
கோணமும் மறுகும் எல்லாம்
-
குச்சு என நிரைத்து அம் மாந்தர்
-
மாண் மது நசையின் மொய்த்த
-
மதுகர ஈட்டம் ஒத்தார்
|
|
|
|
|
616. |
- உருக்கு அமைந்து எரியும் செம் பொன்
-
ஓர் ஐவில் அகலம் ஆகத்
-
திருக் குழல் மடந்தை செல்லத்
-
திரு நிலம் திருத்திப் பின்னர்
-
விரைத் தகு நான நீரால்
-
வெண் நிறப் பொடியை மாற்றிப்
-
பரப்பினர் படு வண்டு ஆர்ப்பப்
-
பல் மலர் பக்கம் எல்லாம்
|
|
|
|
|
617. |
- விலை வரம்பு அறிதல் இல்லா
-
வெண் துகில் அடுத்து வீதி
-
அலர் தலை அனிச்சத்து அம் போது
-
ஐம் முழ அகலம் ஆகப்
-
பல படப் பரப்பிப் பாவை
-
மெல் அடிப் பரிவு தீர
-
நில வரை தன் அனாரை
-
நிதியினால் வறுமை செய்தான்
|
|
|
|
|
618. |
- மண்டலம் நிறைந்த மாசு இல்
-
மதிப் புடை வியாழம் போனறு ஓர்
-
குண்டலம் இலங்க நின்ற
-
கொடியினைக் குறுகித் தோழி
-
விண்டு அலர் கோதை விம்மும்
-
விரைக் குழல் தொழுது நீவிப்
-
பண்டு இயல் மணங்கள் எல்லாம்
-
பரிவு அறப் பணிந்து சொன்னாள்
|
|
|
|
|
619. |
- எரிமணி நெற்றி வேய்ந்த
-
இளம் பிறை இது கொல் என்னப்
-
புரிமணி சுமந்த பொன் பூண்
-
பொறுக்கலா நுசுப்பில் பாவை
-
திருமணி வீணைக் குன்றத்து
-
இழிந்த தீம் பாலை நீத்தத்து
-
அருமுடி அரசர் ஆழ்வர்
-
அம்மனை அறிவல் என்றாள்
|
|
|
|
|
620. |
- மண் இடம் மலிர எங்கும்
-
மாந்தரும் வந்து தொக்கார்
-
ஒள் நிற உரோணி ஊர்ந்த
-
ஒளிமதி ஒண் பொன் ஆட்சித்
-
தௌ நிற விசும்பில் நின்ற
-
தெளிமதி முகத்து நங்கை
-
கண்ணிய வீணை வாள் போர்க்
-
கலாம் இன்று காண்டும் என்றே
|
|
|
|
|
621. |
- பசும் கதிர்க் கடவுள் யோகம்
-
பழிப்பு அற நுனித்து வல்லான்
-
விசும்பு இவர் கடவுள் ஒப்பான்
-
விரிச்சிகன் அறிந்து கூற
-
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால்
-
அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
-
விசும்பு போல் மாந்தர் ஆர
-
விழுநிதி சிதறினானே
|
|
|
|
|
622. |
- வாச நெய் வண்டு மூச
-
மாந்தளிர் விரல்கள் சேப்பப்
-
பூசி வெள்ளி லோத்திரத்தின்
-
பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
-
காசு அறு குவளைக் காமர்
-
அக இதழ் பயில மட்டித்து
-
ஆசு அறத் திமிர்ந்து மாதர்
-
அணி நலம் திகழ் வித்தாரே
|
|
|
|
|
623. |
- கங்கையின் களிற்றின் உச்சிக்
-
கதிர் மணிக்குடத்தில் தந்த
-
மங்கல வாச நல்நீர்
-
மணிநிறம் கழீஇயது ஒப்ப
-
நங்கையை நயப்ப எல்லாம்
-
விரையொடு துவரும் சேர்த்தி
-
அங்கு அரவு அல்குலாளை
-
ஆட்டினார் அரம்பை அன்னார்
|
|
|
|
|
624. |
- வெண் நிற மழையின் மின்போல்
-
வெண் துகில் கலாபம் வீக்கிக்
-
கண் நிறம் முலையும் தோளும்
-
சந்தனத் தேய்வை கொட்டித்
-
தௌ நிறச் சிலம்பு செம் பொன்
-
கிண்கிணி பாதம் சேர்த்தி
-
பண் நிறச் சுரும்பு சூழும்
-
பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்
|
|
|
|
|
625. |
- எரிமணிச் சுண்ணம் மின்னும்
-
இரும் சிலை முத்தம் சேர்த்தித்
-
திருமணி முலையின் நெற்றிச்
-
சிறு புறம் செறியத் தீட்டிப்
-
புரிமணி ஆகத்து ஐதா
-
விரல் நுதி கொண்டு பூசி
-
விரிமணி வியப்ப மேனி
-
ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே
|
|
|
|
|
626. |
- அருங் கயம் விசும்பில் பார்க்கும்
-
அணிச் சிறு சிரலை அஞ்சி
-
இரும் கயம் துறந்து திங்கள்
-
இடம் கொண்டு கிடந்த நீலம்
-
நெருங்கிய மணிவில் காப்ப
-
நீண்டு உலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
-
கருங் கயல் அல்ல கண்ணே
-
எனக் கரி போக்கினாரே
|
|
|
|
|
627. |
- பொருந்து பொன் தூண்கள் நான்கின்
-
பொலிந்து நூல் புலவர் செந்நா
-
வருந்தியும் புகழ்தல் ஆகா
-
மரகத மணி செய் கூடத்து
-
இருந்து இளையார்கள் கோலம்
-
இந்திரன் நிருமித்தால் போல்
-
திருந்தச் செய்து அதன்பின் நங்கை
-
திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்
|
|
|
|
|
628. |
- மண் கனை முழவம் விம்ம
-
வரிவளை துவைப்ப வள்வார்க்
-
கண் கனைந்து இடியின் வெம்பிக்
-
கடல் என முரசம் ஆர்ப்ப
-
விண் கனிந்து உருகு நீர்மை
-
வெள்வளைத் தோளி போந்தாள்
-
பண் கனிந்து உருகு நல் யாழ்ப்
-
படை பொருது உடைக்கல் உற்றே
|
|
|
|
|
629. |
- பரந்து ஒளி உமிழும் பைம் பொன்
-
கண்ணடி பதாகை தோட்டி
-
விரிந்து இருள் மேயும் செம்பொன்
-
விளக்கு வெண்முரசு கும்பம்
-
சுரந்த வெண் மதியைச் சூன்று
-
கதிர் கொண்டு தொகுத்த போலும்
-
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை
-
புணர் கயல் போந்த அன்றே
|
|
|
|
|
630. |
- வென்றவன் அகலம் பூட்ட
-
விளங்கு ஒளி மணி செய் செப்பின்
-
நின்று எரி பசும் பொன் மாலை
-
போந்தது நெறியில் பின்னர்
-
ஒன்றிய மணி செய் நல்யாழ்
-
போந்தன உருவம் மாலை
-
தின்று தேன் இசைகள் பாடத்
-
திருநகர்ச் சுடர அன்றே
|
|
|
|
|
631. |
- ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
-
வீரம் படக் கையை மெய்வழி வீசித்
-
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
-
ஓரும் நடந்தன ஒண்தொடி முன்னே
|
|
|
|
|
632. |
- வட்டச் சூரையர் வார் முலைக் கச்சினர்
-
பட்டு வீக்கிய அல்குலர் பல்கணை
-
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
-
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்
|
|
|
|
|
633. |
- வம்பு வீக்கி வருமுலை உள் கரந்து
-
அம்பின் நொய்யவர் ஆண் உடைத் தானையர்
-
பைம் பொன் கேடகம் வாளொடு பற்றுபுளளள
-
செம் பொன் பாவையைச் சேவித்து முன்னினர்
|
|
|
|
|
634. |
- ஆணை ஆணை அகலுமின் நீர் என
-
வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
-
ஆணை இன்று எமதே என்று அணிநகர்
-
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே
|
|
|
|
|
635. |
- கண்ணி னோடு பிறந்தது காரிகை
-
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
-
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
-
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்
|
|
|
|
|
636. |
- இனம் சேரா ஆகி இளையார்
-
உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
-
புனம் சேர் கொடி முல்லை
-
பூம் பவளத்துள் புக்குப் பூத்த போலும்
-
வனம் சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும்
-
கண்மலரும் வளையல் ஆகாக்
-
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள்
-
வீட்டு உலகம் காணார் போலும்
|
|
|
|
|
637. |
- மீன் சேர் குழாம் அனைய மேகலையும்
-
வெம் முலையும் கூற்றம் கூற்றம்
-
ஊன் சேர் உயிர் உய்யக் கொண்டு
-
ஓடிப் போமின்கள் உரைத்தேம் என்று
-
கான் சேர் கமழ் கோதை கால்
-
தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
-
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி
-
பொன் ஆவதற்கே தக்கது என்பார்
|
|
|
|
|
638. |
- கள் வாய்ப் பெயப் பட்ட மாலைக்
-
கருங் குழல்கள் கண்டார் நைய
-
உள் வாய்ப் பெயப் பட்ட
-
வெம்மதுச் செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
-
புள் வாய் மணி மழலைப் பொன்
-
சிலம்பின் இக் கொடியை ஈன்றாள் போலும்
-
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று
-
ஈன்றாள் அம்மவோ கொடிய வாறே
|
|
|
|
|
639. |
- செய்ய தாமரை மேல் திருவே கொலோ
-
வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ
-
மையில் வானவர் தம் மகளே கொல் என்று
-
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்
|
|
|
|
|
640. |
- வீணை வென்று இவள் வெம் முலைப் பூந் தடம்
-
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
-
கோணைப் போரில் குளிக்குவம் அன்று எனின்
-
மாண நல் தவம் செய்குவம் என்மரும்
|
|
|
|
|
641. |
- குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை
-
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
-
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
-
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்
|
|
|
|
|
642. |
- ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
-
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
-
காட்டி எம்மைக் கொன்றாய் எனக் கைதொழுது
-
ஓட்டை நெஞ்சினர் ஆய் உழல்வார் களும்
|
|
|
|
|
643. |
- திங்கள் மதி முகத்த சேலும்
-
பவளமும்சிலையும் முத்தும்
-
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த
-
கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
-
அங் கை குழியா அரக்கு ஈத்த
-
செந்தளிர் நெய் தோய்த்த போலும்
-
மங்கை மலர் அடியும் தாமரையே
-
யாம் அறியேம் அணங்கே என்பார்
|
|
|
|
|
644. |
- பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல்
-
தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
-
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும்
-
குழைக் கீழ் இலங்கும் ஆறும்
-
மன் மகர வெல் கொடியான் மால்
-
கொள்ளக் கால் கொண்ட முலையினாளை
-
என் அரம்பை என்னாவாறு என்பார்
-
இமைக்கும் கண் இவையோ என்பார்
|
|
|
|
|
645. |
- கோள் வயிர நீள் அருவிக் குன்று இவர்ந்த
-
சென்சுடர் போல் கொலை வேல் மன்னர்
-
நீள்வயிர வெண் மருப்பின் நீலக்
-
களிற்றின் மேல் நிரைத் தார் பொங்கத்
-
தோள் வயிரம் தோன்றத் தொழுவார்
-
அழுது நைவார் தொக்கோர் கோடி
-
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி
-
யார்கொலோ பெறுவார் என்பார்
|
|
|
|
|
646. |
- பைம் பொன் நிமிர் கொடி பாவை
-
வனப்பு என்னும் தளிரை ஈன்று
-
செம் பொன் மலர்ந்து இளையார் கண் என்னும்
-
சீர் மணிவண்டு உழலச் சில் என்று
-
அம்பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல்
-
மெல்லவே ஒதுங்கி அம் பூஞ்
-
செம்பொன் புரிசை அடைந்தாள் செந்
-
தாமரை மேல் திருவோடு ஒப்பாள்
|
|
|
|
|
647. |
- பட்டு இயன்ற கண்டத் திரை வளைத்துப்
-
பல் மலர் நல் மாலை நாற்றி
-
விட்டு அகலாச் சாந்தின் நிலம்
-
மெழுகி மெல் மலர்கள் சிதறித் தூமம்
-
இட்டு இளையர் ஏத்த இமையார்
-
மட மகள் போல் இருந்து நல் யாழ்
-
தொட்டு எழீஇப் பண் எறிந்தாள்
-
கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே
|
|
|
|
|
648. |
- புன் காஞ்சித் தாது தன் புறம்
-
புதையக் கிளி எனக் கண்டு
-
அன்பு கொள் மடப் பெடை
-
அலமந்து ஆங்கு அகல்வதனை
-
என்பு உருகு குரல் அழைஇ
-
இரும் சிறகர் குலைத்து உகுத்துத்
-
தன் பெடையைக் குயில் தழுவத்
-
தலை வந்தது இளவேனில்
|
|
|
|
|
649. |
- தண் காஞ்சித் தாது ஆடித் தன் நிறம் கரந்ததனைக்
-
கண்டு ஆனா மடப் பெடை கிளி எனப் போய்க் கை அகல
-
நுண்தூவி இளஞ் சேவல் நோக்கோடு விளி பயிற்றித்
-
தன் சிறகால் பெடை தழுவத் தலை வந்தது இளவேனில்
|
|
|
|
|
650. |
- குறுத் தாள் குயில் சேவல்
-
கொழுங் காஞ்சித் தாது ஆடி
-
வெறுத்து ஆங்கே மடப் பெடை
-
விழைவு அகன்று நடப்பதனை
-
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து
-
மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி
-
உறுப்பினால் அடி பணியத்
-
தலை வந்தது இளவேனில்
|
|
|
|
|
651. |
- தளை அவிழ் கோதை பாடித்
-
தான் அமர்ந்து இருப்பத் தோழி
-
விளை மதுக் கண்ணி வீணாபதி
-
எனும் பேடி வேல் கண்
-
இளையவள் பாட வீரர் எழால்
-
வகை தொடங்கல் அன்றேல்
-
வளையவள் எழாலின் மைந்தர்
-
பாடுக வல்லை என்றாள்
|
|
|
|
|
652. |
- வேயே திரள் மென்தோள் வில்லே கொடும் புருவம்
-
வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி
-
நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார்
-
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
-
எரி மணீப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்
|
|
|
|
|
653. |
- பலி கொண்டு பேராத பாசம் இவள் கண்
-
ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
-
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
-
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள்
-
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்
|
|
|
|
|
654. |
- நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
-
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
-
கண்டு அறிகிலா இடைக் காம வல்லி யாழ்
-
கொண்டவர் குழாத்து இடைக் கொடியின் ஒல்கினாள்
|
|
|
|
|
655. |
- பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி பையவே
-
கிளிச் சொலின் இனியவர் நீக்கக் கிண்கிணி
-
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
-
அளித்து அவை இரங்கச் சென்று அணையில் ஏறினான்
|
|
|
|
|
656. |
- உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
-
மறை ஒளி மணிச் சுவர் இடை இட்டு இத்தலை
-
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலைக்
-
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே
|
|
|
|
|
657. |
- சிலைத் தொழில் சிறு நுதல் தெய்வப் பாவை போல்
-
கலைத் தொழில் பட எழீஇ இப் பாடினாள் கனிந்து
-
இலைப் பொழில் குரங்கின ஈன்ற தூண்தளிர்
-
நிலத்து இடைப் பறவை மெய்ம் மறந்து வீழ்ந்தவே
|
|
|
|
|
658. |
- கருங் கொடிப் புருவம் ஏறா கயல் நெடுங் கண்ணும் ஆடா
-
அருங் கடி மிடறும் விம்மாது அணிமணி எயிறும் தோன்றா
-
இரும் கடல் பவளச் செவ்வாய் திறந்து இவள் பாடினாளோ
-
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்
|
|
|
|
|
659. |
- இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார்
-
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
-
விசைத்து அவர் பாடலின் வெருவிப் புள் எலாம்
-
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே
|
|
|
|
|
660. |
- மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கைக்
-
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
-
போதரப் பாடினாள் புகுந்த போயின
-
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே
|
|
|
|
|
661. |
- சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
-
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்றபின்
-
நரம்பு உறு தௌவிளி நவின்ற நால் மறை
-
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்
|
|
|
|
|
662. |
- திருமலர்க் கமலத்து அங் கண்
-
தேனின் முரல்வது ஒப்ப
-
விரிமலர்க் கோதை பாட எழால்
-
வகை வீரர் தோற்றார்
-
எரிமலர்ப் பவளச் செவ்வாய்
-
இன் நரம்பு உளர மைந்தர்
-
புரி நரம்பு இசை கொள் பாடல்
-
உடைந்தனர் பொன் அனாட்கே
|
|
|
|
|
663. |
- வால் அரக்கு எறிந்த காந்தள்
-
மணி அரும்பு அனைய ஆகிக்
-
கோல் பொரச் சிவந்த கோலக்
-
குவிவிரல் மடந்தை வீணை
-
நூல் பொரப் புகுந்த நுண் நூல்
-
வணிகரும் தொலைந்து மாதோ
-
கால் பொரக் கரிந்த காமர்
-
பங்கயப் பழனம் ஒத்தார்
|
|
|
|
|
664. |
- தேன் உயர் மகரவீணைத்
-
தீம் சுவை இவளை வெல்வான்
-
வான் உயர் மதுகை வாட்டும்
-
வார்சிலைக் காமன் ஆகும்
-
ஊன் உயர் நுதி கொள் வேலீர்
-
ஒழிக ஈங்கு இல்லை என்றான்
-
கான் உயர் அலங்கல் மாலைக்
-
கட்டியங் காரன் அன்றே
|
|
|
|
|
665. |
- மறு முயற்கு இவர்ந்த வேக
-
மாசுணம் அடையப் பட்ட
-
நிறை மதி போன்று மன்னர்
-
ஒளி குறைந்து உருகி நைய
-
அறு பகல் கழிந்த பின்றை
-
அந்நகர்க்கு ஆதி நாய்கன்
-
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை
-
சீவக சாமி என்பான்
|
|
|
|
|
666. |
- தம்பியும் தோழன் மாரும்
-
தானும் மற்று எண்ணிச் சூழ்ந்து
-
வெம்பிய வீணைப் போருள்
-
செல்குவம் யாமும் முன்னே
-
தும்பு அறப் புத்திசேன சொல்
-
இது குரவற்கு என்னக்
-
கந்துகற்கு அவனும் சொன்னான்
-
அவன் இது விளம்பினானே
|
|
|
|
|
667. |
- ஐயனுக்கு அமைந்த நீரார்
-
அறுபத்து நால்வர் அம்பொன்
-
வையகத்து அமிர்தம் அன்னார்
-
வாக்கு அமை பாவை ஒப்பார்
-
எய்திய இளமை மிக்கார்
-
இயைந்தனர் என்று பின்னும்
-
கை அமை சிலையினாற்குக்
-
கந்துகன் இதுவும் கூறும்
|
|
|
|
|
668. |
- மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில்
-
கோயிலுள் நின்று மாலைப்
-
பிறை வெல்லும் நுதலினாள் ஓர்
-
பெண்கொடி வந்து கூந்தல்
-
உறை செல நீக்கிப் பைந்தாள்
-
ஒண்மணிக் குவளை நீட்ட
-
நறை வெல்லும் நாக மாலை
-
நோக்கொடு பூக் கொண்டானே
|
|
|
|
|
669. |
- நல்லவள் நோக்கம் நாய்கன்
-
தேர்ந்து பூங் குவளைப் போதின்
-
அல்லியுள் கிடந்த ஓலை தாள்
-
அது சலாகை ஆதல்
-
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு
-
துகிலிகைக் கணக்கு நோக்கி
-
வல்லிதில் சலாகை சுற்றி
-
ஓலையை வாசிக் கின்றான்
|
|
|
|
|
670. |
- நம்பனை நகரின் நீக்கிச்
-
சேமத்தால் வைக்க தீயுள்
-
செம் பொன் போல் பெரிதும் சேந்து
-
செகுத்திடல் உற்று நின்றான்
-
வெம்பினான் காரி உண்டிக்
-
கடவுளின் கனன்று வேந்தன்
-
இம்பர் இன்று எனக்குச் சொன்னான்
-
இது பட்டது அடிகள் என்றான்
|
|
|
|
|
671. |
- ஓலையை அவட்கு நீட்டி
-
ஒண் மணிக் குழையும் முத்தும்
-
மாலையும் படுசொல் ஒற்றி
-
வம் என மறைய நல்கி
-
வேலை நெய் பெய்த திங்கள்
-
விரவிய பெயரினாற்கு
-
மேலை நாள் பட்டது ஒன்று
-
விளம்புவல் கேள் இது என்றான்
|
|
|
|
|
672. |
- கடி அரங்கு அணிந்து மூதூர்க் கடல்
-
கிளர்ந்தது அனையது ஒப்ப
-
நடை அறி புலவர் ஈண்டி
-
நாடகம் நயந்து காண்பான்
-
குடை உடையவனொடு எண்ணிச்
-
சீவகன் கொணர்மின் என்னத்
-
தொடையல் சூழ் வேலினானும்
-
தோழரும் காணச் சென்றார்
|
|
|
|
|
673. |
- நிலம் அறிந்து அணிக ஐயன்
-
சீவகன் நெறியின் என்ன
-
நல் நுதல் பட்டம் கட்டி
-
நகை முடிக் கோதை சூட்டி
-
அலர் முலைக் குருதிச் சாந்தும்
-
ஆரமும் பூணும் சேர்த்திக்
-
குலவிய குருதிப் பட்டின்
-
கலைநலம் கொளுத்தி இட்டான்
|
|
|
|
|
674. |
- திருவிலே சொரிந்து மின்னும்
-
குண்டலம் செம் பொன் ஓலை
-
உருவு கொள் மதியம் அன்ன
-
ஒளி முகம் சுடர ஆக்கிப்
-
பரி அகம் சிலம்பு செம் பொன்
-
கிண்கிணி பாதம் சேர்த்தி
-
அரிவையை அரம்பை நாண
-
அணிந்தனன் அனங்கன் அன்னான்
|
|
|
|
|
675. |
- தோல் பொலி முழவும்
-
துளை பயில் குழலும் ஏங்கக்
-
காற்கு ஒசி கொம்பு போலப்
-
போந்து கைத் தலங்கள் காட்டி
-
மேல் பட வெருவி நோக்கித்
-
தானையை விட்டிட்டு ஒல்கித்
-
தோற்றினாள் முகம் செய் கோலம்
-
துளக்கினாள் மனத்தை எல்லாம்
|
|
|
|
|
676. |
- தௌ மட்டுத் துவலை மாலை
-
தேனொடு துளிப்பத் திங்கள்
-
உள் நட்ட குவளை போலும்
-
உருவக் கண் வெருவி ஆட
-
விண் விட்டுக் கடவுள் வீழ
-
நுடங்கின புருவம் நெஞ்சம்
-
பண் விட்டது இருந்து காணும்
-
பல்மணிக் கழலி னார்க்கே
|
|
|
|
|
677. |
- செங் கதிர்ச் சிலம்பு செம் பொன்
-
கிண்கிணி சிலம்பக் கோதை
-
பொங்கப் பொன் ஓலை வட்டம்
-
பொழிந்து மின் உகுப்பப் போர்த்த
-
குங்குமச் சாந்து வேய்ந்து
-
குண்டலம் திருவில் வீச
-
அம் கதிர் ஆரம் மின்ன
-
அரிவை கூத்து ஆடுகின்றாள்
|
|
|
|
|
678. |
- மருங்குலும் ஒன்று தாய்க்கு
-
ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
-
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து
-
இவர்களோ இருந்து காண்க
-
அரங்கின் மேல் இவளைத் தந்த தாய்
-
கொலோ கயத்தி அன்றேல்
-
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்
-
கொலோ கயவர் சொல்லீர்
|
|
|
|
|
679. |
- அகிலார் புகை அலால் சாந்து
-
அணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லின்
-
பகலே பகை வளர்த்த பாவை
-
சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
-
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து
-
எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
-
முகில் ஏந்து மின் மருங்குல் மொய்
-
குழல் தாய் இதுகண்டும் உளளே பாவம்
|
|
|
|
|
680. |
- தேந் தாமம் செம் பவளத் தாமம் செம் பொன்
-
எரி தாமம் மின்னுத்திரள் தாமங்கள்
-
தாம்தாம் தாம் எனத் தாழ்ந்த பொன் மேகலைத்
-
தாம அரங்கின்மேல் தாது ஆர் முல்லைப்
-
பூந் தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம்
-
புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
-
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின்
-
அமரர்மகள் என்பாரும் ஆயினாரே
|
|
|
|
|
681. |
- கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார்
-
கொல்வானே குங்குமச் சேறு ஆட்டினார்கள்
-
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்தாமே
-
அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
-
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு
-
இருந்துகாண்பாரும் உளரே செங்கண்
-
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த
-
நிழல்மதியோ வாள் முகமோ நோக்கிக் காணீர்
|
|
|
|
|
682. |
- நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும்
-
குழல்கற்றை கண்டு நிறை
-
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண்
-
வாள்ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
-
பை பருகு அல்குல் இலயம் பற்றிப்
-
பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
-
மெய் உருகிக் கண் உருகி நெஞ்சு உருகிக் காம
-
வெயில் வெண்ணெய்ப் பாவை போல் மெலிகின்றாரே
|
|
|
|
|
683. |
- ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
-
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
-
ஓடு அரி நெடுங் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
-
வாடிய வாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே
|
|
|
|
|
684. |
- வள மலர் அணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
-
களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன்
-
இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
-
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்
|
|
|
|
|
685. |
- என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம்
-
சென்றமை குறிப்பில் தேறிக் கூத்து எலாம் இறந்த பின்றை
-
நின்றது மனத்தில் செற்றம் நீங்கித் தன் கோயில் புக்கான்
-
மன்றல மடந்தை தன்னை வலிதில் கொண்டு ஒலிகொள் தாரான்
|
|
|
|
|
686. |
- தேன் உடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி
-
ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்குக்
-
கான் உடை மாலை தன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
-
தான் உடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே
|
|
|
|
|
687. |
- கலையினில் கன்னி நீக்கித் தாமரைக் கண்கள் தம்மால்
-
முலையினில் எழுதிச் செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும்
-
சிலை வலாய் புல்லு நம்பி சீவக சாமியோ என்று
-
அலை கடல் புலம்பின் நோவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்
|
|
|
|
|
688. |
- பிறன் நலம் அரற்றக் கேட்டும் பீடினால் கனிந்த காம
-
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
-
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்தொடிக்கு உருகிப் பின்னும்
-
திறன் அல தமர்க்குச் செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்
|
|
|
|
|
689. |
- விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
-
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன மகன் என
-
நலம் கலந்து உரைக்குமால் இந் நல்நகர்க்கு மன்னனோ
-
உலம் கலந்த தோளினீர் நீர் உரைமின் நீவிர் என்னவே
|
|
|
|
|
690. |
- மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மாநகர்க்குள் ஆயிரர்
-
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
-
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
-
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்
|
|
|
|
|
691. |
- வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
-
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
-
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
-
அம் சில் ஓதியார் புனைந்த செஞ் சொல் மாலை சூடினான்
|
|
|
|
|
692. |
- தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
-
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
-
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
-
ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே
|
|
|
|
|
693. |
- இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
-
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
-
அன்னதால் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்
-
இன்னதால் படை அமைத்து எழுமின் என்று இயம்பினான்
|
|
|
|
|
694. |
- தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர்த் தோழன் கூறக்
-
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
-
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கைப்
-
போது உலாம் கண்ணி மைந்தர் போர்ப் புலிக் குழாத்தின் சூழ்ந்தார்
|
|
|
|
|
695. |
- கண் நுதல் கடவுள் சீறக் கனல் எரி குளித்த காமன்
-
மண் மிசைத் தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
-
தௌ மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
-
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்
|
|
|
|
|
696. |
- கரு நெறி பயின்ற குஞ்சிக் காழ் அகில் கமழ ஊட்டி
-
வரி நிற வண்ண மாலை வலம் பட மிலைச்சி வாள் ஆர்
-
திரு நிற முகத்திற்கு ஏற்பச் செம் பொன் ஓர் ஓலை சேர்த்தி
-
எரி நிறக் குழை ஓர் காதிற்கு இருள் அறச் சுடர வைத்தான்
|
|
|
|
|
697. |
- தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை தேம் கொள்
-
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
-
மின் விரித்து அன்னயது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
-
இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்
|
|
|
|
|
698. |
- இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப் பட்ட
-
அரும் பெறல் சுரிகை அம் பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
-
பெருந் தகைக் குருசில் கொண்டு பெருவலம் சுடர வீக்கித்
-
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளங் குமரன் ஒத்தான்
|
|
|
|
|
699. |
- வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
-
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணிக் கலங்கள் தாங்கி
-
நுரை கிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
-
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார்
|
|
|
|
|
700. |
- அரக்கு நீர் எறியப் பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன
-
திருக் கிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி
-
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறுபுலி அனைய நாகம்
-
அருக்கன் ஓர் குன்றம் சேர்நதாங்கு அண்ணல் தான் ஏறினானே
|
|
|
|
|
701. |
- விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண்தேர்
-
கடு நடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி காய்ந்து
-
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
-
அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே
|
|
|
|
|
702. |
- தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
-
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
-
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
-
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே
|
|
|
|
|
703. |
- சுறா நிறக் கொடுங் குழை சுழன்று எருத்து அலைத்தர
-
அறா மலர்த் தெரியலான் அழன்று நோக்கி ஐ எனப்
-
பொறா மனப் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால்
-
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே
|
|
|
|
|
704. |
- குனி கொள்பாக வெண் மதிக் கூர் இரும்பு தான் உறீஇப்
-
பனி கொள் மால்வரை எனப் படு மதக் களிறு இரீஇ
-
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
-
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்
|
|
|
|
|
705. |
- புதிதின் இட்ட பூந் தவிசின் உச்சிமேல் நடந்து அவண்
-
புதிதின் இட்ட மெல் அணைப் பொலிந்த வண்ணம் போகுஉயர்
-
மதியது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
-
உதயம் என்னும் மால்வரை உவந்து இருந்தது ஒத்ததே
|
|
|
|
|
706. |
- முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
-
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இந்நகர்
-
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
-
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்
|
|
|
|
|
707. |
- முனைத் திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
-
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
-
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகனிவன்
-
கனைத்து வண்டு உளர்ந்த தார்க் காளை சீவகன் அரோ
|
|
|
|
|
708. |
- பொன்னை விட்ட சாயலாள் புணர் முலைத் தடத்தினால்
-
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
-
என்னை பட்டவாறு அரோ எழுதி நங்கை ஆட் கொள்வான்
-
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே
|
|
|
|
|
709. |
- இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
-
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
-
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
-
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்
|
|
|
|
|
710. |
- குட்ட நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக்
-
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையைக் கைபோய்
-
இட்ட நாண் வேலி உந்திக் கடல் என எழுந்த வேட்கை
-
விட்டுஎரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்
|
|
|
|
|
711. |
- நலத்தை மத்து ஆக நாட்டி
-
நல்வலி இளமை வாராக்
-
குலப் பிறப்பு என்னும் கையால்
-
கோலப் பாசம் கொளுத்திக்
-
கலக்கி இன் காமம் பொங்கக்
-
கடைந்திடுகின்ற காளை
-
இலைப்பொலி அலங்கல் மார்பம்
-
இயைவது என்று ஆகும் கொல்லோ
|
|
|
|
|
712. |
- தீங் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
-
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
-
பூங் குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
-
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்
|
|
|
|
|
713. |
- கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
-
பெண் எனும் உழலை பாயும் பெருவனப்பு உடைய நம்பி
-
எண்ணின் மற்று யாவன் ஆம் கொல் என் இதில் படுத்த ஏந்தல்
-
ஒண்ணிற உருவச் செந்தீ உருவுகொண்ட அனைய வேலான்
|
|
|
|
|
714. |
- யாவனே யானும் ஆக அருநிறைக் கதவம் நீக்கிக்
-
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னி மாடம் புகுந்து
-
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலை யாலே
-
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்
|
|
|
|
|
715. |
- கழித்த வேல் ஏறு பெற்ற
-
கடத்து இடைப் பிணையின் மாழ்கி
-
விழித்து வெய்துயிர்த்து மெல்ல
-
நடுங்கித் தன்தோழி கூந்தல்
-
இழுக்கி வண்டு இரியச் சேர்ந்து ஓர்
-
கொடிப் புல்லும் கொடியின் புல்லி
-
எழில்தகை மார்பற்கு இன் யாழ்
-
இது உய்த்துக் கொடுமோ என்றாள்
|
|
|
|
|
716. |
- தடங் கணாள் பணியினால் தான் அவ்வீணை ஒன்றினை
-
நெடுங் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
-
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
-
கிடந்த ஞானத்து எல்லையைக் கிளக்கல் உற்று நோக்கினான்
|
|
|
|
|
717. |
- சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
-
பரந்த கேள்வித் துறை போய பைந்தார் மார்பன் பசும்பொன் யாழ்
-
நரம்பு தேன் ஆர்த்து எனத் தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
-
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்
|
|
|
|
|
718. |
- நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
-
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
-
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
-
சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்
|
|
|
|
|
719. |
- கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமத் தீயால் வெந்தவர்போல்
-
கொல்லை உழவர் சுடப் பட்டுக் குரங்கி வெந்தது இது களிறு
-
புல்ல முரிந்தது எனப் போக்கித் தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
-
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்
|
|
|
|
|
720. |
- இரு நில மடந்தை ஈன்றது இருவிசும்பு என்னும் கைத்தாய்
-
திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால்
-
ஒருநலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
-
அருநலம் கவினி வாள்வாய் அரிந்து இது வந்தது என்றான்
|
|
|
|
|
721. |
- தீந் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதிப்
-
பூந் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்டத்
-
தேங் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
-
வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான்
|
|
|
|
|
722. |
- பணிவரும் பைம் பொன் பத்தர் பல்வினைப் பவள ஆணி
-
மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீம்தேன்
-
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல்யாழ்
-
கணிபுகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான்
|
|
|
|
|
723. |
- குரல் குரல் ஆகப் பண்ணிக் கோதை தாழ் குஞ்சியான் தன்
-
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார்
-
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
-
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான்
|
|
|
|
|
724. |
- கன்னி நாகம் கலங்க மலங்கி
-
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
-
மின்னும் மழையின் மெலியும் அரிவை
-
பொன் நாண் பொருத முலை என்கோ யான்
|
|
|
|
|
725. |
- கருவி வானம் கான்ற புயலின்
-
அருவி அரற்றும் மலை என்கோ யான்
-
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
-
மருவார் சாயல் மனம் என்கோ யான்
|
|
|
|
|
726. |
- வானம் மீன் அரும்பி மலர்ந்து
-
கானம் பூத்த கார் என்கோ யான்
-
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
-
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்
|
|
|
|
|
727. |
- அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல் தவழ்ந்த வாறும்
-
பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும் நோக்கி
-
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
-
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்
|
|
|
|
|
728. |
- வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
-
சூழ் மணிக் கோட்டு வீணைச் சுகிர் புரி நரம்பு நம்பி
-
ஊழ் மணி மிடறும் ஒன்றய்ப் பணி செய்தவாறு நோக்கித்
-
தாழ் மணித் தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே
|
|
|
|
|
729. |
- விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
-
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம் மறந்து சோர
-
அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான் அரசர் எல்லாம்
-
பண் அமைத்து எழுதப் பட்ட பாவை போல் ஆயினாரே
|
|
|
|
|
730. |
- பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
-
திருந்து தார்ச் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
-
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
-
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்
|
|
|
|
|
731. |
- கோதை புறம் தாழக் குண்டலமும் பொன் தோடும்
-
காதின் ஒளிர்ந்து இலங்கக் காமர் நுதல் வியர்ப்ப
-
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
-
கீதம் கிடை இலாள் பாடத் தொடங்கினாள்
|
|
|
|
|
732. |
- இலையார் எரிமணிப் பூண் ஏந்து முலையும்
-
சிலையார் திருநுதலும் செம் பசலை மூழ்க
-
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
-
கலையார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்
|
|
|
|
|
733. |
- பிறையார் திருநுதலும் பேரமர் உண் கண்ணும்
-
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
-
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
-
கறைவேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர்
|
|
|
|
|
734. |
- அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
-
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
-
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
-
கரும்பார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்
|
|
|
|
|
735. |
- பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளைக் கை
-
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
-
விண் நின்று இயங்கி மிடறு நடு நடுங்கி
-
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே
|
|
|
|
|
736. |
- மையார் நெடுங் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
-
நையா நடு நடுங்கா நனி நாணம் மீது ஊராப்
-
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன்மாலை
-
பெய் பூங் கழலாற்குப் பெண் அரசி ஏந்தினளே
|
|
|
|
|
737. |
- மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
-
நல்ல பெடையன்னம் நாண அடி ஒதுங்கி
-
ஒல்லென் உயர்தவமே செய்ம்மின் உலகத்தீர்
-
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே
|
|
|
|
|
738. |
- நாகத்துப் படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
-
மேகத்துப் பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
-
ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
-
போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்
|
|
|
|
|
739. |
- செம்மலர் அடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி
-
வெம் முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி
-
விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி
-
மைம்மலர்த் தடங் கண் நங்கை மரைமலர்த் தேவி என்றான்
|
|
|
|
|
740. |
- கோதையும் தோடும் மின்னக் குண்டலம் திருவில் வீச
-
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்பக்
-
காதல் அம் தோழி மார்கள் கருங் கயல் கண்ணினாளை
-
ஏதம் ஒன்று இன்றிப் பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்
|
|
|
|
|
741. |
- வெள் இலை வேல் கணாளைச் சீவகன் வீணை வென்றான்
-
ஒள்ளியன் என்று மாந்தர் உவாக் கடல் மெலிய ஆர்ப்பக்
-
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
-
உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்
|
|
|
|
|
742. |
- வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
-
விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
-
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
-
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகுமின் என்றான்
|
|
|
|
|
743. |
- மல்லுப் பூத்து அகன்ற மார்பீர்
-
புகழ் எனும் போர்வை போர்த்துச்
-
செல்வப் பூ மகளும் நாளை
-
அவன் உழைச் செல்லும் என்றான்
-
முல்லைப் பூம் பந்து தன்னை
-
மும்மதக் களிற்று வேலிக்
-
கொல்லைப் பூங் குன்றம் செய்தீர்
-
குங்குமக் குழங்கல் மாலை
|
|
|
|
|
744. |
- திருமகள் இவளைச் சேர்ந்தான்
-
தெண் திரை ஆடை வேலி
-
இரு நில மகட்கும் செம்பொன்
-
நேமிக்கும் இறைவன் ஆகும்
-
செரு நிலத்து இவனை வென்றீர்
-
திருவினுக்கு உரியீர் என்றான்
-
கரு மனம் நச்சு வெம் சொல்
-
கட்டியங் காரன் அன்றே
|
|
|
|
|
745. |
- அனிச்சப் பூங் கோதை சூட்டின்
-
அம்மனையோ என்று அஞ்சிப்
-
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை
-
ஒருத்தி நாம் பலர் என்று எண்ணித்
-
துனித்து நீர் துளங்கல் வேண்டாம்
-
தூமணிச் சிவிறி நீர் தூய்த்
-
தனிக் கயத்து உழக்கி வென்றீர்
-
தையலைச் சார்மின் என்றான்
|
|
|
|
|
746. |
- வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
-
பந்தணி விரலினாள் தன் படா முலைப் போகம் வேண்டிக்
-
கந்து எனத் திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
-
ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கல் உற்றார்
|
|
|
|
|
747. |
- பண்ணியல் யானை மேலான் பது முகன் பரவைத் தானை
-
கண்ணியது உணர்ந்து கல்லாக் கட்டியங் காரன் நெஞ்சில்
-
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
-
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்று கின்றான்
|
|
|
|
|
748. |
- இசையினில் இவட்குத் தோற்றாம்
-
யானையால் வேறும் என்னின்
-
இசைவது ஒன்று அன்று கண்டீர்
-
இதனை யான் இரந்து சொன்னேன்
-
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம்
-
வழிமுறை வந்தவாறே
-
திசை முகம் படர்க வல்லே
-
தீத் தொட்டால் சுடுவது அன்றே
|
|
|
|
|
749. |
- தோளினால் மிடைந்து புல்லும்
-
தொண்டைவாய் அமிர்தம் வேட்டோர்
-
வாளினால் மலைந்து கொள்ளின்
-
வாழ்க நும் கலையும் மாதோ
-
கோள் உலாம் சிங்கம் அன்னான்
-
கொடியினை எய்தப் பெற்றீர்
-
தாளினால் நொய்யீராகித்
-
தரணிதாம் விடுமின் என்றான்
|
|
|
|
|
750. |
- நாறும் மும் மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
-
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
-
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
-
ஊறித் தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்
|
|
|
|
|
751. |
- இள வள நாகு புல்லி இனத்து இடை ஏறு நின்றால்
-
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
-
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
-
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ
|
|
|
|
|
752. |
- எழுந்து விண் படரும் சிங்கம்
-
பெட்டைமேல் இவர்ந்து நின்றால்
-
மழுங்க மேல் சென்று பாய்தல்
-
மறப்புலி தனக்கும் ஆமோ
-
கொழுங் கயல் கண்ணினாளைச்
-
சீவக குமரன் சூழ்ந்தால்
-
அழுங்கச் சென்று அணைதல் பேய்காள்
-
அநங்கற்கும் ஆவது உண்டோ
|
|
|
|
|
753. |
- மத்திரிப்பு உடைய நாகம் வாய் வழி கடாத்தது ஆகி
-
உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
-
பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால்
-
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ
|
|
|
|
|
754. |
- தூமத்தால் கெழீஇய கோதை
-
தோள் துணை பிரித்தல் விண்மேல்
-
தாமத்தால் கெழீஇய மார்பன்
-
இந்திரன் தனக்கும் ஆகாது
-
ஏம் உற்றீர் இன்னும் கேண்மின்
-
இரதியைப் புணர்தும் என்று
-
காமத்தால் கெழுமினார்க்குக்
-
காமனில் பிரிக்கல் ஆமே
|
|
|
|
|
755. |
- எம்மை நீர் வெல்லப் பெற்றீர்
-
வென்றபின் இருந்த வேந்தன்
-
நும்மையும் வேறு செய்து
-
நும் உளே பொருது வீந்தால்
-
வெம்மை செய்து உலகம்
-
எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
-
அம்ம மற்று அதனை ஓரீர்
-
அவன் கருத்து அன்னது என்றான்
|
|
|
|
|
756. |
- சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்மின் எங்கள்
-
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கிக்
-
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
-
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்
|
|
|
|
|
757. |
- ஆழி அம் கழனி தன்னுள்
-
அம்பொடு கணையம் வித்திச்
-
சூழ் குடர்ப் பிணங்கள் மல்க
-
விளைத்த பின் தொழுதிப் பல்பேய்க்கு
-
ஊழ்படு குருதி நெய்யின்
-
இறைச்சிச் சோறு ஊட்டி வென்றி
-
வீழ்தர வேட்டு நின்றார்
-
எய்துப வெகுளல் வேண்டா
|
|
|
|
|
758. |
- போர்ப் பறை முழங்கி எங்கும்
-
பொருவளி புடைக்கப் பட்ட
-
கார்க் கடல் போன்று சேனை
-
கலக்கமோடு உரறி ஆர்ப்பத்
-
தார் பொலி மார்பன் ஓர்த்துத்
-
தன் கையில் வீணை நீக்கி
-
வார் பொலி முலையினாட்கு
-
வாய் திறந்து இதனைச் சொன்னான்
|
|
|
|
|
759. |
- தேய்ந்து நுண் இடை நைந்து உகச் செப்பினைக்
-
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள்போல்
-
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
-
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்
|
|
|
|
|
760. |
- அண்ணல் கூறலும் அம்மனையோ எனாத்
-
துண் என் நெஞ்சினளாய்த் துடித்து ஆய் இழை
-
கண்ணின் நீர் முலை பாயக் கலங்கினாள்
-
வண்ண மாக் கவின் சொல்லொடு மாய்ந்ததே
|
|
|
|
|
761. |
- மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
-
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
-
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
-
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்
|
|
|
|
|
762. |
- பாழி நம் படை மேல் அது இப் பார் எலாம்
-
நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும்
-
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
-
தோழி தூத்துகில் தோகையின் நீக்கினாள்
|
|
|
|
|
763. |
- எங்கள் பெண்மையும் ஈர்மலர்த் தார் மன்னர்
-
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
-
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
-
நங்கை வாள் படை நங்கையைச் சூழ்ந்ததே
|
|
|
|
|
764. |
- கூன்களும் குறளும் அஞ்சிக்
-
குடர் வெந்து கொழும் பொன் பேழை
-
தான் கொளப் பாய ஓடிச்
-
சாந்துக் கோய் புகிய செல்வ
-
தேன் கொள் பூமாலை சூடித்
-
தாமம் ஆய்த் திரண்டு நிற்ப
-
வான் பளிங்கு உருவத் தூணே
-
மறைபவும் ஆய அன்றே
|
|
|
|
|
765. |
- இங்கித நிலைமை நோக்கி
-
முறுவலித்து எரிபொன் மார்பன்
-
நங்கையைக் காக்கும் வண்ணம்
-
நகா நின்று மொழிந்து பேழ்வாய்ச்
-
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர்
-
செழும் சிங்க முழக்கின் சீறிப்
-
பொங்கி மேல் செல்வதே போல்
-
பொலங் கழல் நரலச் சென்றான்
|
|
|
|
|
766. |
- பதுமுக குமரன் மற்று இப் பாவையைக் காவல் ஓம்பி
-
மதுமுக மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப
-
நுதிமுக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்திச்
-
சதுமுகம் ஆகச் சேனை நமர் தலைப் பெய்க என்றான்
|
|
|
|
|
767. |
- வட்டு உடை மருங்குல் சேர்த்தி
-
வாள் இரு புடையும் வீக்கித்
-
தட்டு உடைப் பொலிந்த திண் தேர்
-
தனஞ்சயன் போல ஏறிக்
-
கட்டளைப் புரவி சூழ்ந்து
-
கால் புடை காப்ப ஏவி
-
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள்
-
எழுந்த அனையது ஒத்தான்
|
|
|
|
|
768. |
- புள் இரைப்பு அன்ன பொன் தார்ப்
-
புரவித் தேர் இரவி போலா
-
உள் உறுத்து எழுந்து பொங்கி
-
உடல் சினம் கடவ நோக்கி
-
முள் எயிறு இலங்க நக்கு
-
முடிக் குழாம் மன்னர் கேட்பக்
-
கள் அவிழ் அலங்கல் மார்பன்
-
கார் மழை முழக்கின் சொன்னான்
|
|
|
|
|
769. |
- முருகு உலா முல்லை மாலை
-
மூப்பு இலா முலையினார் நும்
-
அருகு உலாம் புலவி நோக்கத்து
-
அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ
-
கருதலாம் படியது அன்றிக்
-
கலதி அம்பு இவையும் காய்ந்த
-
பொருது உலாம் புகழை வேட்டு
-
இவ் எஃகமும் புகைந்த என்றான்
|
|
|
|
|
770. |
- வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
-
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
-
ஏண் இகந்து இலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
-
சேண் இகந்து உய்யப் போ நின் செறிதொடி ஒழிய என்றார்
|
|
|
|
|
771. |
- தம்முடைப் பண்டம் தன்னைக்
-
கொடுத்து அவர் உடைமை கோடல்
-
எம்முடையவர்கள் வாழ்க்கை
-
எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
-
அம்முடி அரசிர்க்கு எல்லாம்
-
என் கையில் அம்பு தந்து
-
நும்முடைத் திருவும் தேசும்
-
நோக்குமின் கொள்வல் என்றான்
|
|
|
|
|
772. |
- மட்டு உலாம் தாரினாய் நின்
-
வனப்பினோடு இளமை கல்வி
-
கெட்டு உலாய்ச் சிலம்பு செம் பொன்
-
கிண்கிணி மகளிர் கோங்க
-
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த
-
அகலத்துச் சரங்கள் மூழ்கப்
-
பட்டு உலாய்க் கிடக்கல் உற்றாய்
-
என் சொலாய் பாவி என்றார்
|
|
|
|
|
773. |
- எரிசுடர்ப் பருதி முன்னர்
-
இருள் என உடைந்து நீங்கப்
-
பொருபடை மன்னர் நுங்கள்
-
புறக் கொடை கண்டு மற்று இம்
-
முருகு உடைக் குழலினாள் தன்
-
முகிழ் முலை கலப்பல் அன்றேல்
-
இருசுடர் வழங்கும் வையத்து
-
என்பெயர் கெடுக என்றான்
|
|
|
|
|
774. |
- ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
-
காண் வரு காட்டு இனக் களிற்று நீள் வரை
-
நீள் நில வேந்து எனும் வேழப் பேர் இனம்
-
பூண் முலைப் பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே
|
|
|
|
|
775. |
- தாழ் இரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்
-
தோழர் தன் தாள்களாச் சொரியும் மும்மதம்
-
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
-
ஏழுயர் போதகம் இனத்தொடு ஏற்றதே
|
|
|
|
|
776. |
- குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
-
கொடி எனும் பிடி உடைக் குமர வேழமும்
-
வெடிபடு போர்த் தொழில் காண விஞ்சையர்
-
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்
|
|
|
|
|
777. |
- கரை பொரு கடலொடு கார் கண் உற்று என
-
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
-
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
-
குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே
|
|
|
|
|
778. |
- தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
-
எய் கணைப் படுமழை சிதறி எங்கணும்
-
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
-
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே
|
|
|
|
|
779. |
- கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
-
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
-
விலங்கின தேர்த்தொகை வேழம் காய்ந்தன
-
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே
|
|
|
|
|
780. |
- சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
-
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
-
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
-
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே
|
|
|
|
|
781. |
- மறப் படை பசித்தன வயிறு இன்று ஆர்க எனக்
-
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மாத் துணித்து
-
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
-
துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார்
|
|
|
|
|
782. |
- ஆற்றுவீர் வம்மின் எம்மோடு
-
ஆண்மை மேம்படீஇய என்பார்
-
ஏற்றவர் மார்பத்து அல்லால்
-
இரும்பு மேல் விடாது நிற்பார்
-
கூற்றம் போல் கொடிய யானைக்
-
கோடு உழுது அகன்ற மார்பம்
-
கீற்றுப் பட்டு அழகிதாகக்
-
கிடக்க எனக் கொடுத்து நிற்பார்
|
|
|
|
|
783. |
- கழித்து வாள் அமலை ஆடிக்
-
காட்டுவார் கண்கள் செந்தீ
-
விழித்து மேல் சென்ற வேழம்
-
வேலினால் விலக்கி நிற்பார்
-
தெழித்துத் தேர்க் கயிறு வாளால்
-
அரிந்திட்டுப் புரவி போக்கிப்
-
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு
-
பாக நீ என்று நிற்பார்
|
|
|
|
|
784. |
- ஐங் கதிக் கலினப் பாய் மாச் சிறிது
-
போர் களை ஈது என்பார்
-
வெம் கதிர் வேலில் சுட்டி
-
வேந்து எதிர் கொண்டு நிற்பார்
-
நங்கை கல்யாணம் நன்றே
-
நமக்கு என நக்கு நிற்பார்
-
சிங்கமும் புலியும் போன்றார்
-
சீவகன் தோழன் மாரே
|
|
|
|
|
785. |
- ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே
-
பிறந்தவர் உதயத்து உச்சி
-
இரும்பினால் பின்னி அன்ன
-
எறுழ் வலி முழவுத் தோளார்
-
விரும்புவார் வேழ வேல் போர்
-
நூற்றுவர் நூறு கோடிக்கு
-
இருந்தனம் வருக என்பார்
-
இன்னணம் ஆயினாரே
|
|
|
|
|
786. |
- கூட்டு உற முறுக்கி விட்ட
-
குய மகன் திகிரி போல
-
வாள் திறல் தேவ தத்தன்
-
கலின மா மாலை வெள்வேல்
-
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி
-
இரும் குளம்பு அழுத்தி மன்னர்
-
சூட்டொடு கண்ணி சூளாமணி
-
சிந்தித் திரியும் அன்றே
|
|
|
|
|
787. |
- பாய்ந்தது கலின மாவோ
-
பறவையோ என்ன உட்கி
-
வேந்தர்தம் வயிறு வேவ
-
நபுல மாவிபுலர் என்பார்
-
காய்ந்து தம் புரவிக் காமர்
-
குளம்பினால் களிற்றின் ஓடை
-
தேய்ந்து உகச் சேர்த்தி மாலைத்
-
திருமுடித் திலகம் கொண்டார்
|
|
|
|
|
788. |
- காயத்தின் குழம்பு தீற்றிக்
-
கார் இரும்பு எறிய மேகம்
-
தோயும் முள் இலவின் கூன் காய்
-
சினை தொறும்உதிர்வவே போல்
-
மாயம் கொல் மறவர் மாலைப்
-
பைந்தலை உதிர்ந்த செங் கண்
-
சேய் அனான் திருவின் பேரான்
-
செழுஞ் சிலைப் பகழியாலே
|
|
|
|
|
789. |
- நீல் நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
-
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை வலாளன்
-
போன் நிறப் புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
-
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்
|
|
|
|
|
790. |
- வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
-
சோரும் செங்குருதியுள் மைந்தர் தோன்றுவார்
-
ஒருமேல் ஒண்மணிச் சூட்டு வைக்கிய
-
ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார்
|
|
|
|
|
791. |
- பொன் அனாள் புணர் முலைப் போகம் வேண்டிய
-
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
-
இன்னணம் இத்தலை மயங்க அத்தலைக்
-
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்
|
|
|
|
|
792. |
- தம்பியைச் சீவகன் நோக்கிச் சாமரை
-
வெம் பரி மான் செவி வீரமந்திரம்
-
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
-
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்
|
|
|
|
|
793. |
- மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல்
-
அந்தரத்து இவர்ந்த ஆழிக் கால் நிலம் விட்ட மாலைச்
-
சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தம் கண்ணுள் இட்ட
-
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்
|
|
|
|
|
794. |
- வடி கயிறு ஆய்ந்து முள்கோல் வலக் கையால் தாங்கி வென்றி
-
முடிகெனப் புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
-
கடுகிய வண்ணம் மாவின் தாரொலி காமர் பொன்தேர்
-
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே
|
|
|
|
|
795. |
- அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
-
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
-
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கிப்
-
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே
|
|
|
|
|
796. |
- அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி
-
முகில் கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசை இற்றாகி
-
மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப்
-
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம்பொன் தேரே
|
|
|
|
|
797. |
- கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
-
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
-
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
-
கோல் ஒற்றக் குனிந்த வாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே
|
|
|
|
|
798. |
- நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
-
வெம் களித் தடங்கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா
-
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆகச்
-
செம் களிப் பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே
|
|
|
|
|
799. |
- நன் மன வேந்தர் தங்கள் நகை மணி மார்பம் நக்கிப்
-
புன் மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி
-
இன் உயிர் கவர்ந்து தீமை இனிக் கொள்ளும் உடம்பினாலும்
-
துன்னன்மின் என்பவே போல் சுடுசரம் பரந்த அன்றே
|
|
|
|
|
800. |
- மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
-
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
-
மான் நெறி காட்டும் திண்தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
-
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார்
|
|
|
|
|
801. |
- ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் போலப்
-
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல்வில்
-
கார்க்கு எதிர் மேகம் போலக் கணைமழை கான்றது இப்பால்
-
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே
|
|
|
|
|
802. |
- மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப் படை அழுவ மாரி
-
கொல் நுனை எஃகின் நீக்கிக் குனிந்துவில் பகழி கான்ற
-
மின் அவிர் இலங்கும் ஒள்வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
-
தன்மையால் தானை நீந்தித் தான் விளையாடு கின்றான்
|
|
|
|
|
803. |
- வேழ வெண் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
-
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
-
சூழ் குடர்க் கண்ணி சூடி நிணத் துகில் உடுத்து வெள் என்பு
-
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆடக் கண்டு உவந்து நக்கான்
|
|
|
|
|
804. |
- வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
-
களிற்று உகிர்ப் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி
-
அளித்தவை பாடி ஆடக் குறு நரி நக்கு வேழம்
-
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே
|
|
|
|
|
805. |
- கடல் விளை அமுதம் கண்ட
-
பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
-
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு
-
அண்ணல் அம் குமரன் ஒன்னார்
-
உடலின் மேல் திரியும் திண்தேர்
-
காண்டலும் மைந்தர் நெஞ்சத்
-
திடல் பிளந்து இட்ட எஃகம்
-
சுமந்து அமர்த் திறத்தின் மிக்கார்
|
|
|
|
|
806. |
- கடாம் திறந்திட்டு வானின்
-
களகள முழங்கும் வேழம்
-
படாம் திறந்து ஊழித் தீயின்
-
பதுமுகன் காட்டியிட்டான்
-
தடாம் பிறை மருப்புத் திண்கை
-
அபர காத்திரங்கள் தம்மால்
-
கொடாம் பிற குமரிப் போருள்
-
பிறர்க்கு எனக் கொன்றது அன்றே
|
|
|
|
|
807. |
- மருப்பினால் வேழம் வீழா
-
மன்னரை வாலில் சீறா
-
முருக்கித் தேர் தடக்கை தன்னால்
-
முழங்கிப் பாய் மாக்கள் காலின்
-
நெரித்திடாக் கண்ணுள் தீயால் சுட்டு
-
நீறு ஆக்கி நெய்த்தோர்
-
ஒருக்கிப் பேய் பாடி ஆட
-
உறுசிலை உடன்று கொண்டான்
|
|
|
|
|
808. |
- கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
-
ஒண் தேர் மிசையும் உருவக் களிற்று உச்சி மேலும்
-
வண் தார்ப் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
-
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே
|
|
|
|
|
809. |
- பைம் பொன் புளகப் பருமக்
-
களியானை ஈட்டம்
-
செம் பொன் நெடுந் தேர்த் தொகை
-
மாக் கடல் சேனை வெள்ளம்
-
நம்பன் சிலை வாய் நடக்கும்
-
கணை மிச்சில் அல்லால்
-
அம்பொன் மணிப் பூண் அரசும்
-
இலை என்று நக்கான்
|
|
|
|
|
810. |
- ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
-
அருவரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
-
பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி இட்டார்
-
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கிக் கொண்டார்
|
|
|
|
|
811. |
- செங்கண் மால் தெழிக்கப் பட்ட வலம்புரித் துருவம் கொண்ட
-
சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
-
பொங்கிய முழக்கில் வேழப் பேரினம் புலம்பினால் போல்
-
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே
|
|
|
|
|
812. |
- அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
-
கருவரை குடையப் பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர்
-
திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று
-
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்
|
|
|
|
|
813. |
- முளி மரக்காடு மேய்ந்த முழங்கல் போன்று மைந்தன்
-
தெளி நலக் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
-
ஒளி நலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
-
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே
|
|
|
|
|
814. |
- உறுபடை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றிச்
-
சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
-
செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே
-
உறுபுலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே
|
|
|
|
|
815. |
- நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
-
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
-
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
-
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே
|
|
|
|
|
816. |
- குழை உடை முகத்தினாள் கண் கோணைப் போர் செய்த மன்னர்
-
மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
-
முழையுடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
-
விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே.
|
|
|
|
|
817. |
- பார்மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
-
போர்முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ் சால் கொள் மார்பின்
-
சீர் முகத் தோழர் சூழச் சீவகன் திருவின் சாயல்
-
வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான்
|
|
|
|
|
818. |
- நெய்க் கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பத்தல் கிடத்தப் பட்டார்
-
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப் பட்டார்
-
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப் பட்டார்
-
கைக் கிழி கொடுக்கப் பட்டார் கலம் பல நல்கப் பட்டார்
|
|
|
|
|
819. |
- முது மரப் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
-
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்துப்
-
பதுமுகன் பரவை மார்பின் நெய்க் கிழி பயிலச் சேர்த்தி
-
நுதி மயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே
|
|
|
|
|
820. |
- பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
-
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கித்
-
தார் கெழு மின்னு வீசித் தனிவடம் திளைக்கும் மார்பன்
-
போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினானே
|
|
|
|
|
821. |
- செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
-
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
-
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
-
வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே
|
|
|
|
|
822. |
- கருமணி அழுத்திய காமர் செங் கதிர்த்
-
திருமணிச் செப்பு எனச் செறிந்த வெம் முலை
-
அருமணி அலம் வரும் அம்பொன் கொம்பு அனாள்
-
பெரு மணக் கிழமை யாம் பேசுகின்றதே
|
|
|
|
|
823. |
- நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன
-
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
-
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர்மருள்
-
கோன் தொறுக் காவலன் கொண்டு முன்னினான்
|
|
|
|
|
824. |
- வளை நிற வார் செந் நெல் அரிசிப் பண்டியோடு
-
அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன
-
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
-
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்
|
|
|
|
|
825. |
- சினைத் துணர் முழவு அன பலவின் தீம் கனி
-
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங் கனி
-
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
-
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்
|
|
|
|
|
826. |
- மரகத மணிப் பசும் காய் கொள்வான் குலை
-
கவர் பழுக் காய்க் குலை கனியக் கா உறீஇ
-
இவர் தரு மெல் இலைக் காவும் ஏந்திய
-
உவரியாய்ச் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்
|
|
|
|
|
827. |
- சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
-
தண் கழுநீரொடு குவளை தாமரை
-
வண்டு இனம் மிசை கொள வாசப் பூச் சுமை
-
கொண்டவர் குழாம் பொலிவு உற்றது ஆங்கு ஓர் பால்
|
|
|
|
|
828. |
- ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
-
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
-
கார் கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம்
-
பார் கெழு பழுமரப் பறவை ஒத்தவே
|
|
|
|
|
829. |
- கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
-
ஐ என இருப்ப மற்றன்னது ஆதலான்
-
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
-
செய் தவம் நமக்கு இசைக என்னச் சென்றதே
|
|
|
|
|
830. |
- வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல்
-
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
-
கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து வண்டு
-
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே
|
|
|
|
|
831. |
- உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
-
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
-
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
-
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே
|
|
|
|
|
832. |
- இலங்கு பொன் கிண் கிணி இரங்கும் ஓசையும்
-
உலம்பு மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே
-
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
-
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்
|
|
|
|
|
833. |
- மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
-
ஊழி வாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
-
ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்தத்
-
தாழி வாய்க் குவளை வாள் கண் தையலார் பரவச் சார்ந்தார்
|
|
|
|
|
834. |
- இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
-
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
-
மின் இயல் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
-
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்
|
|
|
|
|
835. |
- இட்ட உத்தரியம் மின்னும் எரிமணிப் பருமுத்து ஆரம்
-
மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்கல் ஆற்றா
-
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர்வளை முன்கை பற்றிக்
-
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன்கட்டில் தான் ஏறினானே
|
|
|
|
|
836. |
- மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னைக்
-
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
-
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
-
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே
|
|
|
|
|
837. |
- அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
-
முடி மணி அழுத்திச் செய்த மூரிக் காழ் நெற்றி மூழ்கக்
-
கடி மலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி
-
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே
|
|
|
|
|
838. |
- ஐந்து மூன்று அடுத்த செல்வத்து
-
அமளி மூன்று இயற்றிப் பூம்பட்டு
-
எந்திர எழினி வாங்கி
-
இன் முக வாசச் செப்பும்
-
சந்தனச் சாந்தச் செப்பும்
-
தண்மலர் மாலை பெய்த
-
இந்திர நீலச் செப்பும்
-
இளையவர் ஏந்தினாரே
|
|
|
|
|
839. |
- கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன்
-
காசு அறுதட்டின் சூழ்ந்து
-
மிடைந்து பெய் மணிக் கண் பீலி
-
மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
-
அடைந்து வீசு ஆல வட்டம்
-
அரிவையர் ஏந்தி ஆற்றத்
-
தடங் கண்கள் குவளைப் பூப்பத்
-
தையலோடு ஆடும் அன்றே
|
|
|
|
|
840. |
- பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர்க் கலாபம் வீங்கச்
-
செந் தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
-
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
-
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து எனப் பருகினானே
|
|
|
|
|
841. |
- இளமுலை மணிக்கண் சேப்ப
-
எழுது வில் புருவம் ஏறக்
-
கிளை நரம்பு அனைய தீம் சொல்
-
பவளவாய் திகழத் தேன் சோர்
-
வள மலர்க் கோதை தன்னை
-
வாய்விடான் குழையப்புல்லி
-
அளமரல் இலாத இன்பக் கடல்
-
அகத்து அழுந்தினானே
|
|
|
|
|
842. |
- இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக் காவு காண்பான்
-
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றித்
-
துன்னி ஓர் ஓலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப
-
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்கு கின்றான்
|
|
|
|
|
843. |
- உருமுக் கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
-
பருமைக் குருப் பளிங்கில் புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த
-
திரு மிக்கு உடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க
-
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்
|
|
|
|
|
844. |
- தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
-
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
-
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்னச்
-
சித்தம் கரிந்து ஆங்குக் கொடியான் செரு விளைத்தான்
|
|
|
|
|
845. |
- தேன் முழங்கு தார்க் குரிசில் செம் பொன் நெடுந் தேர் மேல்
-
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
-
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
-
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்
|
|
|
|
|
846. |
- வந்து தரன் கூறிய இவ் வாய் மொழியும் அன்றி
-
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடிப்
-
பந்து புடை பாணி எனப் பாயும் கலி மான் தேர்
-
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்
|
|
|
|
|
847. |
- எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
-
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்திக்
-
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
-
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா
|
|
|
|
|
848. |
- ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணாப்
-
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
-
தேம் புனலை நீர்க் கடலும் சென்று தரல் இன்றே
-
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே
|
|
|
|
|
849. |
- மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
-
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
-
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
-
தந்த எனச் சொல்லி நனி சாமி கொடுத்தானே
|
|
|
|
|
850. |
- குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
-
வெம் கண் இளமுலையின் மிசை எழுதி விளையாடிக்
-
கொங்கு உண் மலர்க் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
-
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்
|
|
|
|
|