முகப்பு |
தொடக்கம் |
நரக கதித் துன்பம்
|
|
2762. |
- வெவ்வினை செய்யும் மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி
-
அவ் வினை விளையுள் உண்ணும் அவ்விடத்து அவர்கள் துன்பம்
-
இவ் என உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ளம்
-
செவ்விதின் சிறிது கூறக் கேள் மதி செல்வ வேந்தே
|
|
|
|
|
2763. |
- ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே
-
சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
-
வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து
-
ஆழ் துயர் உழப்ப ஊணும் அருநவை நஞ்சு கண்டாய்
|
|
|
|
|
2764. |
- இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரிநுனைச் சுரிகை கூட
-
நட்டவை நிரைத்த பூமி நவை உடை நரகர் பொங்கி
-
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம்
-
எட்டு எலாத் திசையும் சிந்திக் கிடப்பவால் அடக்கம் இல்லார்
|
|
|
|
|
2765. |
- வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலைப்
-
பைந் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி
-
வந்து உடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய்
-
கந்து அடு வெகுளி வேகக் கடா முகக் களிற்று வேந்தே
|
|
|
|
|
2766. |
- வயிர முள் நிரைத்து நீண்ட வார்சினை இலவம் ஏற்றிச்
-
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல்நுனைக் கழுவில் ஏற்றி
-
மயிருக்கு ஒன்று ஆக வாங்கி அகைத்து அகைத்திடுவர் மன்னா
-
உயிரைப் பேது உறுத்தும் மாந்தர் உயிரைப் பேதுறுக்கும் ஆறே
|
|
|
|
|
2767. |
- துடிக் குரல் குரல பேழ்வாய்த் தொடர்ப் பிணி உறுத்த செந்நாய்
-
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்தக் கௌவிப்
-
புடைத்திட அலறி ஆற்றார் பொன்றினும் பொன்றல் செல்லார்
-
உடுப்பு இனம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்பம் மாதோ
|
|
|
|
|
2768. |
- வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த
-
பாளத்தைக் கொடிற்றின் ஏந்திப் பகுத்து வாய் புகுத்தல் ஆற்றார்
-
ஊளைக் கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாயத்
-
தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலை மானின் பட்டார்
|
|
|
|
|
2769. |
- காதலாள் கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி
-
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து
-
ஊது உலை உருக வெந்த ஒள் அழல் செப்புப் பாவை
-
ஆ தகாது என்னப் புல்லி அலறுமால் யானை வேந்தே
|
|
|
|
|
2770. |
- சிலையினால் மாக்கள் கொன்று செழுங் கடல் வேட்டம் ஆடி
-
வலையினால் மீன்கள் வாரி வாழ் உயிர்க் கூற்றம் ஆன
-
கொலைநரைக் கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தி இட்டு
-
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய்
|
|
|
|
|
2771. |
- பாரகம் கழுநர் போலப் பரூஉத் தடி பலரும் ஏந்தி
-
வீர நோய் வெகுளி தோற்றி விழுப்பு அற அதுக்கி இட்டுக்
-
காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில்
-
பாரக் கூர்ந்தறிகள் நட்டுப் பனை எனப் பிளப்பர் மாதோ
|
|
|
|
|
2772. |
- நாப் புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கிப்
-
பூப்புடை அணிந்த பொய்கை புக்கு நீர் உண்ணல் உற்றால்
-
சீப்படு குழம்பது ஆகிச் செல்லல் உற்று அந்தோ என்னக்
-
கூப்பிடு குரலாய் நிற்பர் குறைப் பனைக் குழாங்கள் ஒத்தே
|
|
|
|
|
2773. |
- நறு மலர்த் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர்க்
-
குறுகலும் குட நெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கிப்
-
பறை அலகு அனைய வெண்பல் பசுங் கழல் குண்டு பைங்கண்
-
உறு துயர் நரகர் தம்மை உருகச் சுட்டிடுங்கள் அன்றே
|
|
|
|
|
2774. |
- வெந்து உருக்கு உற்ற செம்பின் விதவையுள் அழுத்தி இட்டும்
-
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில்
-
சுந்து எழுந்து அரைத்தும் போகச் சுண்ணம் ஆ நுணுக்கி இட்டும்
-
மந்தரத்து அனைய துன்பம் வைகலும் உழப்ப மாதோ
|
|
|
|
|
2775. |
- உழும் பகட்டு எருது போல உரன் அறு தாளர் ஆகிக்
-
கொழுங் களி அளற்றுள் வீழ்ந்தும் கொழும் புகை மடுக்கப் பட்டும்
-
அழுந்தும் இந் நரகம் தன்னுள் செல்பவர் யார் கொல் என்னின்
-
எழுந்து வண்டு இமிரும் பைந்தார் இறைவ நீ கேண்மோ என்றான்
|
|
|
|
|
2776. |
- கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார்
-
இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்
-
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும்
-
செல்ப அந் நரகம் தன்ணுள் தீ வினைத் தேர்கள் ஊர்ந்தே
|
|
|
|
|