முகப்பு |
தொடக்கம் |
விலங்கு கதித் துன்பம்
|
|
2777. |
- எரி நீரவே நரகம் அந் நரகத் துன்பத்து
-
ஒரு நீரவே விலங்கு தாம் உடைய துன்பம்
-
பெரு நீர வாள் தடம் கண் பெண் அணங்கு பூந்தார்
-
அருநீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்
|
|
|
|
|
2778. |
- கழை பொதிர்ப்பத் தேன் சொரிந்து காய்த் தினைகள் ஆர்த்தும்
-
மழை தவமும் குன்றில் வயமா முழங்க
-
உழை அளிய தாம் உறூஉம் துன்பங்கள் நின் மேல்
-
விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய்
|
|
|
|
|
2779. |
- நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர்
-
குணன் நஞ்சர் கூற்று அனைய கோள் நாய் மடுப்பக்
-
கண மஞ்ஞை அஞ்சிக் கழுத்து ஒளிப்ப கண்டாய்
-
மணம் மல்கு பூந்தார் மழை தழீஇய கையாய்
|
|
|
|
|
2780. |
- மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டிக்
-
கண் ஆர் மறி அறுத்துக் கையால் உதிரம் தூய்
-
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இவ் உலகம்
-
நண்ணார்க் கடந்தோய் நமன் உலகின் நால் மடங்கே
|
|
|
|
|
2781. |
- மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு
-
செங் கண் வரி வரால் செந் நீர் இள வாளை
-
வெம் கருனை புல்லுதற்கு வேறு வேறாக் குறைப்ப
-
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே
|
|
|
|
|
2782. |
- கடல் அரணம் ஆகாது காடு அரணம் ஆகா
-
குடல் அரணம் ஆகாது குன்று அரணம் ஆகா
-
அடுதுயரம் ஊர்ந்து அலைப்ப ஆங்கு அரணம் காணாப்
-
படு துயரத்தாலே பதைத்து அளிய வேமே
|
|
|
|
|
2783. |
- முழுப் பதகர் தாள் துரந்து முள் தாற்றில் குத்தி
-
உழப்பு எருது பொன்றப் புடைத்து உழுது விட்டால்
-
கழித்து உண்ணும் காக்கை கடிவோரும் இன்றிப்
-
புழுச் சொரியத் துன்பம் பொறுக்கலா பொன்றும்
|
|
|
|
|
2784. |
- நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
-
பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
-
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றித் தாள் தவழ்ந்து வாங்கி
-
உரம் கெட்டு உறுப்பு அழுகிப் புல் உண்ணா பொன்றும்
|
|
|
|
|
2785. |
- போழ் மதி போல் கூர் இரும்பின் பூ நுதல்கள் போழ்ந்திடவும்
-
காழ் நுதியின் குத்துண்டும் கார் மழை போல் நின்று அதிர்ந்தும்
-
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து
-
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே
|
|
|
|
|
2786. |
- எரி வளைப்ப வெம்புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும்
-
அரி வளைப்பக் குஞ்சரமும் ஆலி போல் நீராம்
-
வரி வளைக்கும் வெண் மயிர்க்கும் முத்திற்கும் மாந்தர்
-
திரு வளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்
|
|
|
|
|
2787. |
- வேள்வி வாய்க் கண்படுத்தும் வெவ் வினை செய் ஆடவர் கை
-
வாளின் வாய்க் கண் படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல்
-
கோள் இமிழ்ப்பு நீள் வலை வாய்க் கண்படுத்தும் இன்னணமே
-
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம்
|
|
|
|
|
2788. |
- கொல்வாரும் கூட்டுள் செறிப்பாரும் ஆடவர்கள்
-
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே
-
அல்லாத பைங் கிளியும் பூவையும் ஆதியா
-
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏம் உறு நோய் செய்பவே
|
|
|
|
|
2789. |
- மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும்
-
பல்லவரே அன்றிப் பகுத்து உணாப் பாவிகளும்
-
அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார்
-
வில் பொரு தோள் மன்னா விலங்காய்ப் பிறப்பவே
|
|
|
|
|