முகப்பு |
தொடக்கம் |
நற்காட்சி
|
|
2812. |
- கொங்கு விம்மு குளிர் பிண்டிக் குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்பச்
-
சிங்கம் சுமந்த மணி அணை மேல் தேவர் ஏத்திச் சிறப்பு அயர
-
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
-
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே
|
|
|
|
|
2813. |
- இலங்கு செம் பொன் எயில் மூன்றும்
-
எரி பொன் முத்தக் குடை மூன்றும்
-
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும்
-
வையம் மூன்றும் படை மூன்றும்
-
கலங்காது உயர்ந்த அதிசயங்கள்
-
மூன்றும் காமர் நூல் மூன்றும்
-
நலம் கொள் தீம் பால் குணக் கடலும்
-
உடையார் நம்மை உடையாரே
|
|
|
|
|
2814. |
- மன்றல் நாறும் அணி முடி மேல்
-
மலிந்த சூளா மணி போலும்
-
வென்றோர் பெருமான் அறவாழி
-
வேந்தன் விரி பூந் தாமரை மேல்
-
சென்ற திருவார் அடி ஏத்தித்
-
தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும்
-
அன்றி ஆறும் ஒன்பானும்
-
ஆகும் என்பார் அறவோரே
|
|
|
|
|
2815. |
- பெரிய இன்பத்து இந்திரனும்
-
பெட்ட செய்கைச் சிறு குரங்கும்
-
உரிய செய்கை வினைப் பயத்தை
-
உண்ணும் எனவே உணர்ந்து அவனை
-
அரியர் என்ன மகிழாதும்
-
எளியர் என்ன இகழாதும்
-
இரு சார் வினையும் தெளிந்தாரே
-
இறைவன் நூலும் தெளிந்தாரே
|
|
|
|
|
2816. |
- உறுவர்ப் பேணல் உவர்ப்பு இன்மை
-
உலையா இன்பம் தலை நிற்றல்
-
அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல்
-
அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல்
-
சிறியார் இனத்துச் சேர்வு இன்மை
-
சினம் கைவிடுதல் செருக்கு அவித்தல்
-
இறைவன் அறத்து உளார்க்கு
-
எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே
|
|
|
|
|
2817. |
- செறியச் சொன்ன பொருள் தெளிந்தார்
-
சேரார் விலங்கில் பெண் ஆகார்
-
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ்
-
முத்தேவர் குழாம் தீண்டார்
-
அறியாது உரைத்தேன் அது நிற்க
-
ஆறே நரகம் ஆகாத
-
பொறியார் போக பூமியுள்
-
விலங்கும் ஆவர் ஒரு சாரார்
|
|
|
|
|