முகப்பு |
தொடக்கம் |
சீலம்
|
|
2818. |
- ஏத்த அருந் திருமணி இலங்கு நீர்மைய
-
கோத்தன போல் குணம் நூற்றுக் கோடியும்
-
காத்தன காவல பதின் எண் ஆயிரம்
-
பாத்தன பண்ணவர் சீலம் என்பவே
|
|
|
|
|
2819. |
- மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர்
-
மெய்புகு பொன் அணி கவசம் ஒப்பன
-
மையல் ஐம் பொறி மதம் வாட்டி வைகலும்
-
செய்வினை நுணுக்குவ சீலம் என்பவே
|
|
|
|
|
2820. |
- மணித் துணர் அனைய தம் குஞ்சி வண் கையால்
-
பணித்தனர் பறித்தலின் பரவை மா நிலம்
-
துணித்து ஒரு துணி சுமந்து அனைய திண் பொறை
-
அணித்தகு முடியினாய் ஆதி ஆகவே
|
|
|
|
|
2821. |
- பெரிய வாள் தடம் கண் செவ்வாய்ப்
-
பிறர் மனை பிழைக்கும் மாந்தர்
-
மரீஇ அவாய்ப் புறம் சொல் கூர்
-
முள் மத்திகைப் புடையும் அன்றி
-
ஒருவர் வாய் உமிழப் பட்ட
-
தம்பலம் ஒருவர் வாய்க் கொண்டு
-
அரியவை செய்ப வையத்து
-
ஆண் பிறந்தார்கள் அன்றே
|
|
|
|
|
2822. |
- ஒழுக்கமே அன்றித் தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும்
-
புழுப் பயில் தேனும் அன்றிப் பிறவற்றின் புண்ணும் மாந்தி
-
விழுப் பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார்
-
பழித்தன ஒழித்தல் சீலம் பார்மிசை அவர்கட்கு என்றான்
|
|
|
|
|