தானம்
 
2823.
  • நல் நிலத்து இட்ட வித்தின் நயம் வர விளைந்து செல்வம்
  • பின் நிலம் பெருக ஈனும் பெறல் அருங் கொடையும் பேசின்
  • புன் நிலத்து இட்ட வித்தின் புற்கு என விளைந்து போகம்
  • மின் எனத் துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே
   
2824.
  • ஐவகைப் பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
  • மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டுப்
  • பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
  • செய்தவம் நுனித்த சீலக் கனை கதிர்த் திங்கள் ஒப்பார்
   
2825.
  • வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர் தொறும் செத்தினாலும்
  • பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்து அடி பணிந்த போதும்
  • தூக்கி இவ் இரண்டும் நோக்கித் தொல் வினை என்று தேறி
  • நாச் செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார்
   
2826.
  • பால் கதிர்த் திங்கள் கொட்பின் பருமித்த களிறு போல
  • நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
  • மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால்
  • காற்கு ஒசி கொம்பு போலக் கை தொழுது இறைஞ்சி மாதோ
   
2827.
  • தொடிக் கையால் தொழுது வாழ்த்தித் தூமணி நிலத்துள் ஏற்றிப்
  • பொடிப் புனை துகிலின் நீக்கிப் புகழ்ந்து அடி கழீஇய பின்றை
  • அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார்
  • கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே
   
2828.
  • ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த
  • இன்பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
  • துன்பு உற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
  • நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா