முகப்பு
தொடக்கம்
சீலப் பயன்
2843.
செப்பிய சீலம் என்னும் திருமணி மாலை சூழ்ந்தார்
கப்பத்துள் அமரர் ஆவர் காட்சி இன் அமிர்தம் உண்டார்
ஒப்ப நீர் உலகம் எல்லாம் ஒரு குடை நிழற்றி இன்பம்
கைப் படுத்து அலங்கல் ஆழிக் காவலர் ஆவர் கோவே