முகப்பு |
தொடக்கம் |
வீடு பேறு
|
|
2844. |
- வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர்ப்
-
பாட்டரும் பனிமதி பழித்த முக் குடை
-
மோட்டு இரும் கொழுமலர்ப் பிண்டி மூர்த்தி நூல்
-
ஈட்டிய பொருள் அகத்து இயன்றது என்பவே
|
|
|
|
|
2845. |
- உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம்
-
தௌளிதின் அப் பொருள் தெளிதல் காட்சி ஆம்
-
விள் அற இருமையும் விளங்கத் தன் உளே
-
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே
|
|
|
|
|
2846. |
- கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல்
-
நீடிய வினை மரம் நிரைத்துச் சுட்டிட
-
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு
-
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே
|
|
|
|
|
2847. |
- கடை இலா அறிவொடு காட்சி வீரியம்
-
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும்
-
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
-
அடைதலான் மேல் உலகு அறியப் பட்டதே
|
|
|
|
|