பெரிய யாத்திரை
 
2995.
  • இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
  • கலம் சொரி காவலன் கடகக் கை இணை
  • புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
  • வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே
   
2996.
  • என்பு அரிந்து எரிதலைக் கொள்ள ஈண்டிய
  • அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
  • மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
  • பொன் சொரி தாமரைப் போது போன்றவே
   
2997.
  • பூந் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
  • ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மாமணி
  • காந்திய கற்பகக் கானம் ஆயினான்
  • ஏந்திய மணி முடி இறைவன் என்பவே
   
2998.
  • தேய் பிறை உருவக் கேணித்
  • தேறு நீர் மலர்ந்த தேனார்
  • ஆய் நிறக் குவளை அஞ்சிக்
  • குறுவிழிக் கொள்ளும் வாள் கண்
  • வேய் நிறை அழித்த மென் தோள்
  • விசயையைத் தொழுது வாழ்த்திச்
  • சேய் நிறச் சிவிகை சேர்ந்தான்
  • தேவர் கொண்டு ஏகினாரே