முகப்பு |
தொடக்கம் |
சேணிகன் வினா
|
|
3059. |
- மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும்
-
ஏதம் இன்று இயம்புமின் அடிகளோ எனப்
-
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான்
-
காதலின் கணம் தொழக் காவல் மன்னனே
|
|
|
|
|
3060. |
- பாட்டு அரும் கேவலப் பரவை மாக் கடல்
-
கூட்டு அரும் கொழுந் திரை முகந்து மா முனி
-
மோட்டு இரு மணி முகில் முழங்கிப் பெய்தலின்
-
ஊட்ட அரும் அற அமிர்து உலகம் உண்டதே
|
|
|
|
|
3061. |
- சீவகன் திருவினம் ஆக யாம் என
-
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று அரோ
-
காவலன் ஆதியாக் கணங்கள் கை தொழப்
-
பாவம் இல் சுதன்மரால் பாடப் பட்டதே
|
|
|
|
|