|
இதன்கண்: மானனீகையைக் கண்ட
உதயணன் செயலும், தேவியர் இருவரும் உதயணன்பால் வருதலும், உதயணன் தோழியரை அழைத்து
வினவுதலும், அவன் வாசவதத்தையை வினவுதலும், அவள் சினந்துரைத்தலும், உதயணன் அவட்குக்
கூறுதலும், உதயணன் மானனீகையை வினவுதலும், மானனீகை விடைகூறலும், உதயணன் செயலும்,
மானனீகை செயலும், அவன் செயலும், வாசவதத்தையின் முகவெழுத்தை மானனீகை காண்டலும்,
மானனீகை எழுத்தைக் கண்டு உதயணன் மீட்டும் எழுதி விடுதலும், மானனீகை மறுமொழி எழுதி
விடுத்தலும், அது கண்டு உதயணன் மகிழ்தலும், மானனீகை மறைந்திருத்தலும், உதயணன்
செயலும், வாசவதத்தை உதயணன் செயலை ஒற்றி வருமாறு காஞ்சனமாலையை விடுத்தலும், உதயணன்
மானனீகையுடன் காதல் மொழி பேசிக் கலத்தலும், காஞ்சனமாலை அந்நிகழ்ச்சியை
வாசவதத்தைக் குணர்த்தலும், வாசவதத்தை உதயணனைக் கண்டு கூறலும், அவன் வினவுதலும், அவள்
விடை கூறலும், இருவரும் சொல்லாடுதலும், இருவரும் தனித்தனிச் செயல் செய்தலும், உதயணன்
திகைத்தலும் வாசவதத்தை ஊடிச் செல்லலும் கூறப்படும். |