10322. | மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச் | | சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, | | தா இல் | | பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, | | விண்ணோர் | | எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் | | செய்தார்.* | | மங்கல கீதம் பாட - மங்கலப் பாடல்கள் ஒலிக்கவும்; மறை ஒலி முழங்க - வேத முழக்கம் கேட்கவும்; வல் வாய்ச் சங்கு இனம் குமுற - பெரிய வாயை உடைய சங்குகள் ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப- தாளமும் மத்தளமும் ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப- குற்றம் தீர்ந்த பல்வகை இசைக் கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்கவும்; பூ மழை பொழிய - பூ மாரி பெய்யவும்; விண்ணோர் - வானோர்; எங்கள் நாயகனை - எங்கள் தலைவனாகிய இராமபிரானை; வெவ்வேறு - தனித்தனியாக; எதிர்ந்து அபிடேகம் செய்தார்- அயோத்தியில் வரவேற்று தீர்த்தமாட்டினர். | (23) |
|
|
|