1357. | பழுது இல் மா தவன், பின் ஒன்றும் பணித்திலன், இருந்தான் ; முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம், இறை மகற்கு ஏற்க. தொழுத கையினன், சுமந்திரன் முன் நின்று, சொல்லும் : |
பழுது இல் மா தவன் - குற்றம் இல்லாத சிறந்த தவத்தையுடை யோனாகியவசிட்டன் ; பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் - பிறகு வேறு யாதும் சொல்லாமல்இருந்தான் ; முழுதும் எண்ணுறும் மந்திரக் கிழவர் - எதனையும் தீரச்சிந்திக்கின்ற அமைச்சர்கள் ; தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் - தம்முகத்தினால் எழுதிக் கொடுத்த குறிப்பினை ; இறை மகற்கு ஏற்க - தயரதனுக்குப்பொருந்த ; சுமந்திரன் முன் நின்று - சுமந்திரன் எதிரில் எழுந்து நின்று; தொழுத வகையினன்- கும்பிட்ட கைகளையுடையவனாய் ; சொல்லும் -சொல்வான். 44 |