ராமனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல் 1360. | என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன், ‘நன்று சொல்லினை ; நம்பியை நளி முடி சூட்டி- நின்று, நின்றது செய்வது ; விரைவினில், நீயே சென்று, கொண்டு அணை, திருமகள் கொழுநனை’ என்றான். |
என்றவாசகம் - இவ்வாறான சொற்களை; சுமந்திரன்இயம்பலும்- சுமந்திரன் மென்மையாகத் தெரிவித்தவுடன் ; இறைவன் - அரசனாகிய தயரதன் ; ‘நன்று சொல்லினை - நல்லதையே சொன்னாய் ; நம்பியை நளிமுடி சூட்டிநின்று - குணங்களால் நிறைந்தவனான இராமனுக்குப் பெருமை பொருந்தியமகுடத்தை அணிவித்து ; நின்றது செய்வது- மேலே செய்ய நின்றதைச்செய்வோமாக ; நீயே விரைவினில் சென்று- நீயே விரைவாகப் போய் ; திருமகன் கொழுநனை -திருமகளைப்போலும் சீதைக்குக் கணவனான இராமனை ; கொண்டு அணை’ என்றான் - அழைத்துக்கொண்டு வருவாய்’ என்றான். நளி - பெருமை ; மனு முதற்கொண்டு சூடிய சிறப்பு. நின்றது - எஞ்சி நின்றது ; ஈண்டுத் தவஞ்செய்தல். செய்வது - வியங்கோள் வினைமுற்று. 47 |