1377. ‘முன்னை ஊழ்வினைப் பயத்தினும்,
     முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும்,
     அரிதினின் பெற்றேன் ; 
இன்னம், யான் இந்த அரசியல்
     இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின்
     நிரம்புவது யாதோ?

     ‘முன்னைஊழ்வினைப் பயத்தினும் - முற்பிறப்பில் செய்த நல்
வினையின் விளைவாகவும் ;  பின்னை முற்றிய வேள்வி எய்தி
நலத்
தினும்- பிறகு இப்பிறப்பில் செய்து முடித்த வேள்வியால் அடைந்த
நன்மையாலும் ;  அரிதினின் பெற்றேன் - உன்னைஅரிய பேறாகப்
பெற்றேன் ; இன்னம் - இன்னமும் ;  யான்இந்த அரசியல்
இடும்பையின் நின்றால்
-நான் இந்த அரச வாழ்க்கையாகிய துன்பத்தில்
இருந்தால் ;  நின்னை ஈன்றுளபயத்தினின் -உன்னைப் பெற்றதால்
அடைந்த பயனால் ;  நிரம்புவதுயாதோ - நிறைவதுஎவ்வாறு?

     முற்றிய வேள்வி - அசுவமேதம். புத்திரகாமேஷ்டி முதலியன.
‘மெய்யாயவேதத்துறை வேந்தருக்கு ஏய்ந்த யாரும் செய்யாத யாகம் இவன்
செய்தும் மறந்த மாதோ’ என்றுதயரதன் செய்த வேள்விகள் பற்றி முன்னும்
சொன்னார். (170)                                             64