1416. | ‘ஆவதற்கும், அழிவதற்கும், அவர் ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும் தேவரைப் பரவும் துணை சீர்த்ததே? |
‘அவர் ஏவ - அந்தணர் ஆணையிட; ஆவதற்கும் - (ஒருவர்) மேம்படுவதற்கும்; அழிவதற்கும் - அழிந்துபோவதற்கும்; விதியும் நிற்கும்- விதியும் துணையாக நின்றுஉதவும்; என்றால்-; இனி -; இம்மையும் - இவ்வுலகத்தும்; அம்மையும் - அவ்வுலகத்தும்;தேவரைப் பரவும்துணை- பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு; சீர்த்தது -சிறப்புடையது; ஆவது - பொருந்திய; எப்பொருள் - எந்தப் பொருள்?’ (எதுவும் இல்லை.) தெய்வங்களுக்கும் கட்டுப்படாது தன்வழியில் செயற்படும் விதியும் அந்தணர்க்கு ஏவல் செய்யும் என்பதாம். ‘ஏ’ ஈற்றசை. 18 |