வசிட்டன் இராமனுடன் திருமால் கோயிலை அடைந்து சடங்குகள் இயற்றல் 

1428. ஏனை நீதி இனையன, வையகப்
போனதற்கு விளம்பி, புலன் கொளீஇ,
ஆனவன்னொடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான்.

    தத்துவம் நண்ணினான்- மெய்ப்பொருள் உணர்வில்
நெருங்கியவனாகிய வசிட்டன்; வையகப் போனகற்கு- உலகத்தை உண்டு
வயிற்றகத் தடக்கித் காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு; இனையன
ஏனை நீதியும்
- இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும்; விளம்பி - சொல்லி;
புலன்கொளீஇ- அறிவு கற்பித்து; ஆனவன்னொடும்- அவனுடனே;
ஆயிர மௌலியான்- ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது;
தானம்- திருக்கோயிலை; நண்ணினான்-சென்றடைந்தான்.

    ஊழியிறுதியில் உலகம் உண்ட பெருவாயன் ஆதலின் திருமாலை
‘வையகப் போனகன்’ என்றார்; “உலகு யாவையும் மன் வயிற்றின் அடக்கிய
மாயனை” என்று முன்னர்க் (1406) கூறியது காண்க. இதுவரை 15
பாடல்களால் கூறியனவற்றையும், இதுபோன்ற நீதிகளையும் உள்ளடக்கி
“இணையன ஏனை நீதி” என்று ஹஅடக்கிக் கூறினார். தத்துவம் என்பது
மெய்யணர்வு. அஃதாவது, பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும்
விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல்’ என திருக்குறள்,
மெய் உணர்தல் (அதி. 36) என்னும் அதிகாரத்து முகவுரையில் பரிமேலழகர்
உரைத்தவாற்றான் அறிக. அங்ஙனம் உணர்ந்தவன் ஆதலின், வசிட்டன்
இராமனையும் பரம்பொருள் என உணர்ந்தவனே, ஆயினும், அவன்
கொண்ட வேடத்திற்கு ஏற்ப உபதேசித்தான் என்று உணர்த்தவே ஈண்டுத்
“தத்துவம் நண்ணினான்” என்றார். ஆயிரம் மௌலி என்றது அளவிறந்த
திருமுடிகள் என்னுங் கருத்தில் கூறியது.                          30