தயரதன் உற்ற பெருந் துயர் 1514. | இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே, வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப, சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;- மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். |
மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர; உயிர் வேறு இலாத மன்னன் -தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய தயரதன்; அவ் ஏழை - அந்த அறிவற்றவளானகைகேயி; இந்த நெடுஞ் சொல் கூறும் முன்னே - இந்தப் பெரிய வஞ்சினத்தைச்சொல்லிமுடிக்கு முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய புண்ணில்;வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல; சிந்தை திரிந்து -மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து வீழ்ந்தான் - சோர்ந்துதரையில் சாய்ந்தான். |