தயரதன் வரம் தருதல்  

1538.‘வீய்ந்தாளே இவ் வெய்யவள்’ என்னா,
     மிடல் வேந்தன்
‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ் வரம்;
     என் சேய் வனம் ஆள,
மாய்ந்தே நான் போய் வான் உலகு
     ஆள்வென்; வசை வெள்ளம்
நீந்தாய், நீற்தாய், நின்
     மகனோடும் நெடிது!’ என்றான்.

     மிடல் வேந்தன் - வலிமை பொருந்திய தயரதன்; ‘இவ் வெய்யவன்
வீய்ந்தாளேஎன்னா -
இந்தக் கொடியவள் நாம் உடன்படாவிட்டால்
இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த
வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என்
மகன் இராமன் காட்டை ஆள;  நான் மாய்ந்துபோய் - யான்
இறந்துபோய்;  வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்;
நெடிது- நெடுங்காலம்;  நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய
பரதனுடன் கூடி;  வசை வெள்ளம் - பழியாகிய கடலை;  நீந்தாய்
நீந்தாய் -
கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’
என்றான் -.

     தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று
அஞ்சி,  ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து  கூறினான். இவ் அடுக்கு -
தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி
இறந்த காலத்தில் கூளினார்.                                     48