அரசர்கள் வருதல் 1561. | இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர, உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே - குமிழ் முலைச் சீதை கொண்கன் கோமுடி புனைதல் காண்பான், அமிழ்து உணக் குழுழுகின்ற அமரரின். அரச வெள்ளம். |
அரச வெள்ளம் - அரசர்களின் பெருந்திரள்; குமிழ் முலைச் சீதை கொண்கன் -குவிந்த நகில்களையுடைய சீதைக்குக் கணவனாகிய இராமபிரான்; கோமுடி புனைதல் காண்பான்- அரசுக்குரிய மகுடம் சூட்டிக்கொள்ளுவதைக் காண்பதற்கு; உமிழ்வது ஒத்து உதவுகாதல் உந்திட - (உள்ளே நிறைந்து) புறம்பே வெளிப்படுவது போன்று மிகுகின்ற விருப்பம்தம்மைத்தூண்ட; அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் - அமுதத்தை உண்பதற்கு ஆவலோடுதிரண்ட தேவர்களைப் போல; இமிழ்திரைப் பரவை ஞாலம் - ஒலிக்கும் அலைகளையுடையகடலால் சூழப்பட்ட உலகம்; எங்கணும் வறுமை கூர - எல்லா இடத்தும் வெறுமையடையும்படி;வந்தது - வந்து கூடிற்று; அரசர் கூட்டத்திற்குத் தேவர் கூட்டத்தை உவமை கூறினார். உவமை அணி. பரவை - பரவிஇருப்பது; ஐ - வினைமுதல் விகுதி. அன்று, ஏ - அசைகள். 71 |