அரண்மனையில் இராமன் அரசனைக் காணாமை 1594. | ஆங்க வந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீச, பூங் குழல் மகளிர் உள்ளம் புதுக் களி ஆட, நோக்கி, வீங்கு இருங் காதல் காட்டி, விரி அரி சுமந்த பீடத்து ஓங்கிய மகுடம் சூடி, உவகை வீற்றிருப்பக் காணான். |
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் - தயரதனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தஇராமபிரான்; ஆசையின் கவரி வீச - திசைகள் தோறும் சாமரைகள் வீச; பூங் குழல்மகளிர் உள்ளம் - பூவை அணிந்துள்ள குழலையுடைய மங்கையர் மனம்; புதுக் களி ஆட - புதிய மகிழ்ச்சியால் ஆடவும்; வீங்கு இருங் காதல் காட்டி - மிகுந்த விருப்பத்தை (தன்வருகையில்) காட்டி; ஓங்கிய மகுடம் சூடி - சிறந்த கிரீடத்தை அணிந்த; அரசன் - தயரதன்; விரி அரி சுமந்த பீடத்து - விசாலமான சிங்கம் தாங்கும்ஆசனத்தில்; உவகை வீற்றிருப்பக் காணான் - மகிழ்வுடன் வீற்றிருக்கவும்கண்டானில்லை. மகளிர் உவகையால் ஆடுதலையும் தயரதன் காதல் காட்டி வீற்றிருத்தலையும் இராமன்காணவில்லை அரண்மனை பொலிவின்றி இருந்தது. என்றவாறு. ஆசை - திசை. வீற்றிருத்தல் -மற்றொருவர்க்கு இல்லாத சிறப்போடு விளங்கித் தோன்றுதல். 104 |