1617.‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால் -
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,
பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே.

     ‘அன்புஇழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்துப் பேரன்பு
செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீஎன்
பிழைத்தனை’ -
நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று- என்று
சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்-
முற்பிறவியிற்
செய்தவினையால் இப்போது வறுமையில் வாடியவர்கள்;
பொன் பிழைக்க
- எதிர்பாராமல்கிடைத்த பொன்னானது  தவறியதால்;
புலம்பினர் போல- புலம்பியவர்களைப் போல; ஏங்கும் - வருந்து
வாள் ஆயினள்.

     பெறாது பெற்ற செல்வமாகிய புத்திரப் பேற்றைப் இப்போது காட்டிற்கு
அனுப்பி இழக்கநேர்ந்தபடியால் வறுமையில் வாடியவர் பொன்னைப் பெற்று
அதுவும் கைநழுவியபோது வருந்துவது போலவருந்தினாள் என உவமை
கூறினார் - பொன் தவறிப்போக இருக்க அதைத் திரும்ப இறுக்க
மூடிப்பிடிப்பவர் எனவும், பொன் தவறிப் போகப் பொதிந்தனர் - அதாவது
முகத்தை  மூடிக்கொண்டுஅழுபவர் போல எனவும்,  பொன்
தவறிப்போகும்படி  வைத்திருந்தவர் போல எனவும் பொருள் கூறுவது 
உண்டு,  ஏற்பது  கொள்க. ‘ஆல்’, ‘ஏ’ அசைகள்.                    12