1632. | ‘அவனி காவல் பரதனது ஆகுக; இவன் இஞ்ஞாலம் இறந்து, இருங் கானிடைத் தவன் நிலாவகை காப்பென், தகவினால் புவனி நாதன்- தொழுது’ என்று, போயினாள். |
‘அவனி காவல் பரதனது ஆகுக - இந்த உலகத்தை ஆளும் அரசாட்சி பரதனுடையதுஆகட்டும்; இவன் - இராமன்; இஞ்ஞாலம் இறந்து - இக் கோசல நாட்டைத்தாண்டி; இருங் கானிடை - பெரிய காட்டிடத்தே; தவன் நிலாவகை - தவத்தில்நில்லாதபடி; தகவினால் - நடுவு நிலைமையால்; புவனி நாதன் தொழுது - தயரதனைவணங்கி வேண்டி; காப்பென் - ‘காப்பாற்றுவேன்; என்று போயினாள் - என்று (தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள். முறைப்படி அரசன்பால் வேண்டி அவன் இட்ட ஆணையே மாற்ற எண்ணுதலின் ‘தகவினால்’என்றார். தவம், தவன் என்றமைந்தது ஈற்றுப் போலி. 27 |